தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: சிட்டாடல் படத்திற்காக சமந்தா வாங்கிய சம்பளம் என்ன?

Samantha: சிட்டாடல் படத்திற்காக சமந்தா வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi V HT Tamil
Jun 13, 2023 10:01 AM IST

சிட்டாடல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா
சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

சிட்டாடல் என்பது ஆங்கில வெப் சீரிஸ். ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடித்துள்ளனர். இந்த பாத்திரங்களின் இந்திய பதிப்பில் சமந்தா மற்றும் வருண் தவான் ஆகியோர் காணப்படுவார்கள்.

தற்போது சமந்தா பற்றி இன்னொரு செய்தி வந்துள்ளது . சிட்டாடல் தொடருக்காக சமந்தா தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா, சிட்டாடல் படத்துக்கு 10 கோடி வாங்குகிறாராம். இதன் மூலம் பாலிவுட் நட்சத்திர நடிகைகளின் சம்பளத்துக்கு இணையாக நிற்கிறார் சமந்தா. பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், தீபிகா, கங்கனா ஆகியோர் 8 முதல் 10 கோடி ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்கள். இப்போது சமந்தாவும் அதே சம்பளம் வாங்குகிறார்.

சமந்தா முன்பு ராஜ் மற்றும் டிகே ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். தி ஃபேமிலி மேன் தொடரில் நடித்துள்ளார். இது மாபெரும் வெற்றி பெற்றது. சிட்டாடல் தனது முந்தைய வெப் சீரிஸ் ஹிட் ஆனதால் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சமந்தா வெப் சீரிஸ், குஷி படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் சமந்தா குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றார். இதில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் துருக்கியில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமந்தா தற்போது செர்பியாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் . சமீபத்தில், சமந்தா மற்றும் வருண் செர்பியாவில் உள்ள ஒரு கிளப்பில் காணப்பட்டனர். 'ஹு ஆண்டவா மாவா ஊஹூ ஆண்டவா' என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடினர். செர்பியாவில் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிட்டாடல் என்பது ஸ்பை த்ரில்லர் வகையிலான பாலிவுட் வெப் சீரிஸ் ஆகும். தி ஃபேமிலி மேன் தொடரைத் தயாரித்த ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே இந்தத் தொடரையும் தயாரிக்கிறார்கள். இந்தத் தொடர் பிரைம் வீடியோவிலும் வெளியாக வாய்ப்புள்ளது. சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் வருண் ஓடிடியில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தி ஃபேமிலி மேன் படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே , எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார். அவரை எங்களோடு இணைத்துக்கொண்டதில் எங்களை விட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது”என்றனர் ராஜ் & டி.கே.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்