நான் ஒரு ஏஜெண்ட்..நோ ரொமான்ஸ் ஒன்லி ஆக்ஷன்..சமந்தாவின் தெறிக்கவிடும் அவதாரத்துடன் சிட்டாடல் ஓடிடி வெப் சீரிஸ்
நோ ரொமான்ஸ் ஒன்லி ஆக்ஷன் மோடில் சமந்தாவின் தெறிக்கவிடும் அவதாரத்துடன் சிட்டாடல் ஓடிடி வெப் சீரிஸ் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியில் மட்டும் வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சமந்தா ஸ்பை ஏஜெண்டாக நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டில் ரிலீஸானது. இதன் பின்னர் சமந்தாவின் ஆன் ஸ்கீரின் கம்பேக்குக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அவரது புதிய வெப் சீரிஸ் சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தெறிக்கவிடும் ஆக்ஷன் அவதாரம்
சுமார் 2.51 நிமிடங்கள் ஓடக்கூடிய சிட்டாடல்: ஹனி பன்னி ட்ரெய்லர் முழுவதிலும் தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடித்திருக்கும் சமந்தா, பெண் குழந்தைக்கு தாயாகவும், சீக்ரெட் ஏஜெண்டாகவும் தோன்றுகிறார்.
ட்ரெயலரில் இடம்பிடித்திருக்கும் காட்சிகளில் பைக் ஸ்டண்ட், கார் சேஸ், கன் பைட் என வருண் தவானுடன் இணைந்தும், தனியாகவும் தெறிக்கவிட்டுள்ளார் சமந்தா. இதன் மூலம் புதிய அவதாரம் ரசிகர்களுக்கு சமந்தாவின் விருந்து காத்திருக்கிறது என்றே கூறலாம்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வெப் சீரிஸின் அறிமுக நிகழ்ச்சி மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸரில் டயலாக்குகள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும், முழுக்க சமந்தா - வருண் ஜோடியின் அதிரடி ஆக்ஷன், ஒரு சில ரெமான்ஸ் காட்சிகள் இடம்பிடித்திருந்தன. தற்போது வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் வருண் தவான், சமந்தா ஆகியோர் ஸ்பை ஏஜென்சி ஒன்றுக்கு வேலை செய்வது போலாவும், எதிரிகளை பந்தாடுவதுமாகவும் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.-
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெப் சீரிஸ் ட்ரெய்லர் இந்தியில் வெளியாகியுள்ளது. அத்துடன் வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்டீரிமிங் ஆக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் டப் செய்யப்படும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
சிட்டாடல் சீரிஸ்
ஹாலிவுட் ஸ்பை த்ரில்லர் டிவி சீரிஸான சிட்டாடல் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரலில் அமேசான் ப்ரைமில் வெளியானது. 300 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரிஸின் இந்திய பதிப்பாக வருண் தவான் - சமந்தா நடித்திருக்கும் சிட்டாடல்: ஹனி பன்னி உருவாகியுள்ளது. தி பேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளனர். இதில் கே கே மேனன், சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சிட்டாடல் சீரிஸின் இத்தாலிய பதிப்பான சிட்டாடல் டயானா கடந்த 10ஆம் தேதி அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியானது.
சமந்தாவின் கம்பேக்
மயோசிடிஸ் என அரிய வகை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, இடையில் சில காலம் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். அவரது கம்பேக் வெப்சீரிஸாக இந்த சிட்டாடல்: ஹனி பன்னி அமைந்திருக்கும் நிலையில் இதன் டீஸரை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து பயர் விட்டு வருகிறார்கள்.
நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பதற்கு முன்னர் சிட்டாடல் சீரிஸில் தான் நடித்து முடித்தார். தன் செட்களில் இருந்து புகைப்படத்தையும், சிட்டாடல் பட இயக்குநர் ராஜ்-டிகே மற்றும் திரைக்கதை ஆசிரியர் சீதா மேனன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உருக்கமான பதிவையும் பகிர்ந்திருந்தார்.
சமந்தாவுக்கு இந்த சிட்டாடல்: ஹனி பன்னி சீரிஸ் பாலிவுட் என்ட்ரியாகவும் அமைகிறது. த்ரிஷா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் போன்ற தென் இந்திய நடிகைகளின் வரிசையில் சமந்தாவும் பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைக்கிறார்.
டாபிக்ஸ்