தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் பான் இந்தியா ஸ்டார்.. போட்டு உடைக்கப்பட்ட உண்மை.. இதுதான் பிரச்சனையா?

சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் பான் இந்தியா ஸ்டார்.. போட்டு உடைக்கப்பட்ட உண்மை.. இதுதான் பிரச்சனையா?

Oct 25, 2024, 09:04 AM IST

google News
பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ், நடிகை சமந்தா உடன் நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ், நடிகை சமந்தா உடன் நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ், நடிகை சமந்தா உடன் நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய மக்களைக் கவர்ந்தவர் பிரபாஸ். இந்தப் படத்திற்குப் பின் அவர் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இவர் தொடர்ந்து நடிகை சமந்தாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் பல தகவல்கள் உலாவி வருகிறது.

சமந்தாவுடன் நடிக்க தயங்கும் பிரபாஸ்

தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, தன் முதல் படத்திலேயே கதாநாயகியாக மாறியது தெலுங்கு சினிமாவில் தான். இவர் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இவர் கதாநாயகியாக நடித்து மக்களைக் கவர்ந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம்வரத் தொடங்கினார்.

அப்படி இருக்கையில், அவர் தெலுங்கு சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், அவர் நடிகர் பிரபாஸுடன் தற்போது வரை சேர்ந்து நடித்ததில்லை.

பிரபாஸ் தரப்பு கூறும் காரணம்

இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்பது திட்டமிட்டே நடந்து வருகிறது என சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து விசாரித்ததில், நடிகை சமந்தாவுடன் நடிப்பதற்கு உயரப் பிரச்சனையே காரணம் என பிரபாஸ் தரப்பினர் கூறுகின்றனர். நடிகர் பிரபாஸ் 6 அடிக்கும் மேல் உயரம் கொண்டவர். அதுமட்டுமின்றி, மிகவும் கட்டுக்கோப்பான உடலமைப்பை தொடர்ந்து பராமரித்து வருகிறார். அப்படி இருக்கையில் அவர் சற்று உயரமான நடிகைகளுடன் ஜோடி சேர்வதையே விரும்புகிறாராம்.

சமந்தா வெறும் 5 அடி தான் என்பதால், அவருக்கு ஜோடியாக நடித்தால் பார்ப்பதற்கு அவ்வளவாக நன்றாக இருக்காது என நினைக்கிறார்களாம். அதுமட்டுமின்றி, உ.யர வித்தியாசம் தெரியாமல் இருக்க என்ன வேலை செய்தாலும் அது காட்டிக் கொடுத்து விடுமாம். இதனால் பிரபாஸ் சமந்தாவுடன் நடிக்க தயக்கம் காட்டுகிறாராம்.

சமந்தாவிற்கு பதில் வேறு நடிகை

முன்னதாக பிரபாஸின் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா தான் நடிக்க இருந்ததாம். ஆனால், இந்த உயர வித்யாசங்களைக் காரணம் காட்டி தான் அந்தப் படத்தில் சமந்தாவிற்கு பதில், ஷ்ரதா கபூர் நடித்திருந்தார். பிரபாஸ் தரப்பிலிருந்து வந்த விளக்கம் சமந்தா ரசிகர்களிடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகை

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, பின் டோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக உள்ள நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். பின், நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விவாகரத்து செய்து, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.

மீண்டு வந்த நடிகை சமந்தா

பின் மயோசிடைஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதிலிருந்து மீண்டு வந்து, நடிப்பதில் கவனம் செலுத்தினார். பின், பாலிவுட் திரைப்படங்கள், வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்கள் புகழ்ந்து தள்ளி வரும் நிலையில், இவரது உயரத்தை குறிப்பிட்டு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்ப்பது சரியானது அல்ல என சமந்தாவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி