சலார் 2 முதல் கல்கி 2 வரை..ரூ. 2,100 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல்! பிரபாஸ் மீது கட்டப்பட்டிருக்கும் பந்தயம்
பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸின் சலார் 2 முதல் கல்கி 2 வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் ரூ. 2,100 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. பிரபாஸ் பிறந்தநாளான இன்று அடுத்தடுத்து அவரது நடிப்பில் உருவாகும் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்

முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டார் என்ற பெருமையை பெற்றவராக தெலுங்கு சினிமாவின் ஹீரோ பிரபாஸ் இருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் புதிய உச்சத்தில் இருந்து வரும் நிலையில், அவரது பிறந்த நாள் ஒரு நடிகரின் பிறந்தநாளாக மட்டுமல்லாமல், இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
'பாகுபலி' சீரிஸ் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்த பிரபாஸ் அடுத்த 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் மூலம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்தார். இந்திய சினிமாவில் புதிய சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபாஸ் தொடர்ந்து இந்திய முழுவதும் ரசிகர்களை கவரும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது மார்கெட் அறிந்து தயாரிப்பாளர்களும் பிரபாஸ் திரைப்படங்களை பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்து உருவாக்க முன் வருகிறார்கள்.
பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அதற்கான தோற்றம், அவருடைய நடிப்பும் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்