பாலய்யா நிகழ்ச்சியில் சூர்யா.. ஹைதராபாத்தில் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு.. ஷாக் ஆன டோலிவுட்
பாலய்யா நிகழ்ச்சியில் சூர்யா.. ஹைதராபாத்தில் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு.. ஷாக் ஆன டோலிவுட் வட்டாரம் குறித்த செய்தியைப் பார்ப்போம்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே. டாக் ஷோவில் (Unstoppable with NBK Season 4) நடிகர் சூர்யாவும் பாலிவுட் நடிகர் பாபி தியோலும் கலந்துகொண்டுள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா எனப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாப்பளிள் வித் என்.பி.கே' என்னும் டாக் ஷோவின் நான்காவது சீசன் நாளை முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடுக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதன் முதல் எபிசோடு அக்டோபர் 25ஆம் தேதி, இரவு 8:30 மணிக்கு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் எபிசோடின் ப்ரோமோக்கள் வைரலாகி வருகின்றன.இந்நிலையில் ஆஹா ஓடிடி மற்றொரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது.