தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 நாளுக்கு அப்புறம் புஷ்பா ரசிகர்களுக்கு கிடைத்த ட்ரீட்.. இதுலயும் ஹைதராபாத் தான் ஃபர்ஸ்ட்!

10 நாளுக்கு அப்புறம் புஷ்பா ரசிகர்களுக்கு கிடைத்த ட்ரீட்.. இதுலயும் ஹைதராபாத் தான் ஃபர்ஸ்ட்!

Dec 15, 2024, 07:49 PM IST

google News
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குப் பிறகு அப்படத்தின் 3டி வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு.
புஷ்பா 2 திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குப் பிறகு அப்படத்தின் 3டி வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு.

புஷ்பா 2 திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குப் பிறகு அப்படத்தின் 3டி வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளது படக்குழு.

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 294 கோடி வசூலித்து, ஓபனிங் நாளில் அதிக வசூலை பெற்ற படம் என்ற புதியதொரு சாதனை புரிந்துள்ளது.

மாஸ் ஓபனிங்

புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும். இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 10வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 986.3 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 10வது நாளான நேற்று சுமார் ரூ.116.3கோடி வசூலை ஈட்டியுள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.

புஷ்பா படத்தின் அடுத்த அப்டேட்

கடந்த டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான புஷ்பா 2 படம் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்து ரூ.1,200 கோடியை நெருங்கி வருகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் கேரியரில் சிறந்த படமான புஷ்பா 2வை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தை 3டி வெர்ஷனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் சில திரையரங்குகளில் 3டியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால், இதன் பணிகள் முடிவடையாததால் அத்திட்டத்தை ஒத்திப்போட்ட படக்குழு, 3டி பணிகள் முடிவடைந்த உடன் தியேட்டர்களில் தற்போது 3டி பதிப்பை வெளியிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் ரிலீஸ்

புஷ்பா 2 படத்தின் 3டி காட்சிகள் முதற்கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள சில தியேட்டர்களில் சோதனை அடிப்படையில் திரையிடப்படுவதாகவும் பின் மெல்ல மெல்ல நாட்டின் அனைத்து நகரங்களிலும் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா 2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில், இந்தப் படம் தெலுங்கை விட இந்தியில் வசூல் அதிகமாக பெற்று வருகிறது.

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி