அடேங்கப்பா... 880 கோடியை தாண்டிய புஷ்பா 2 தி ரூல்.. புஷ்பா காட்டில் கூரையை பிய்த்துக் கொட்டும் பண மழை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடேங்கப்பா... 880 கோடியை தாண்டிய புஷ்பா 2 தி ரூல்.. புஷ்பா காட்டில் கூரையை பிய்த்துக் கொட்டும் பண மழை..

அடேங்கப்பா... 880 கோடியை தாண்டிய புஷ்பா 2 தி ரூல்.. புஷ்பா காட்டில் கூரையை பிய்த்துக் கொட்டும் பண மழை..

Malavica Natarajan HT Tamil
Dec 11, 2024 08:41 AM IST

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் 6ம் நாள் வசூல் விவரங்கள் இதோ..

அடேங்கப்பா... 880 கோடியை தாண்டிய புஷ்பா 2 தி ரூல்.. புஷ்பா காட்டில் கூரையை பிய்த்துக் கொட்டும் பண மழை..
அடேங்கப்பா... 880 கோடியை தாண்டிய புஷ்பா 2 தி ரூல்.. புஷ்பா காட்டில் கூரையை பிய்த்துக் கொட்டும் பண மழை..

மாஸ் ஓபனிங்

புஷ்பா 2: தி ரூல் படத்திற்கு இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இல்லாத அளவிற்கான ஓபனிங் கிடைத்தது. மேலும் புஷ்பா 2 படமே இதுவரை அதிக வசூல் செய்த படமாகும். இரண்டு மொழிகளில் ஒரே நாளில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.

ரிலீசுக்கு முந்தைய நாள் திரையிடப்பட்ட ப்ரிவியூ, முதல் நாள் காட்சிகள் என அனைத்தும் சேர்த்து இவ்வளவு வசூல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நாளில் புஷ்பா திரைப்படம் கைப்பற்றிய வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் Sacnilk.com கூற்றுப்படி, படி, புஷ்பா 2 ரிலீசான 6வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ 709.3 கோடி வசூலித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அளவில் வெளியிடப்பட்ட புஷ்பா திரைப்படம் 6வது நாளான நேற்று சுமார் ரூ.880.3 கோடி வசூலை ஈட்டியுள்ளது. படத்தின் வசூல் முதல் நாளைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சற்று குறைந்து காணப்பட்டாலும், வார இறுதி நாள்களில் அதிகப்படியான வசூல்களைக் குறித்து வருகிறது.

டிக்கெட் விலை உயர்வு

புஷ்பா 2 வசூல் வேட்டைக்கு மற்றொரு முக்கிய காரணமாக, சமீபத்தில் உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை உயர்வை கூறலாம். இதற்காக ஆந்திர பிரதேச அரசாங்கத்துக்கு அல்லு அர்ஜுன் நன்றி கூட தெரிவித்திருந்தார்.

படத்தின் வெற்றி குறித்து அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் தனது நன்றியைத் தெரிவித்தார். படத்தின் ஸ்டில் ஒன்றைப் பகிர்ந்துகொண்டு, “கங்கம்மா தளி ஆசீர்வாதங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதியதொரு உச்சம்

முதல் நாளில் கிட்டத்தட்ட ரூ. 175 கோடி வசூலித்த புஷ்பா 2, இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதியதொரு உச்சத்தை தொட்டது. இதற்கு முன்னர் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் ரூ. 133 கோடி வசூலை முறியடித்தது. முதல் நாளில் அதிக வசூல் பெற்ற பாலிவுட் படமான ஜவான் வசூலையே பின்னுக்கு தள்ளியது.

புஷ்பா 2

இந்தப் படத்தில் அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், அவர் இப்படத்தில் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவராக மாறியுள்ளார். புஷ்பாவின் மனைவியான ஸ்ரீ வள்ளியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் இதில் மலையாள நடிகர் ஃபஹத் நடித்த போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் என்ற பெயரிடப்பட்டு இந்த அறிவிப்போடு கதை முடிகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.