தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ’நல்லக்கண்ணுவை வீழ்த்திய கோவை மக்கள் அண்ணாமலையை ஆதரிப்பார்களா?’ கோவை மக்களவை தொகுதி கள நிலவரம்!

HT MP Story: ’நல்லக்கண்ணுவை வீழ்த்திய கோவை மக்கள் அண்ணாமலையை ஆதரிப்பார்களா?’ கோவை மக்களவை தொகுதி கள நிலவரம்!

Kathiravan V HT Tamil

Mar 23, 2024, 10:31 AM IST

google News
”1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லக்கண்ணுவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார்”
”1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லக்கண்ணுவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார்”

”1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லக்கண்ணுவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார்”

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி!

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதி உள்ளது. 

தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கோயம்புத்தூர் மக்களவை தொகுதி உள்ளது. 

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னதாக சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் இருந்தன. 

இதுவரை நடைபெற்றுள்ள 17 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும். திமுக, பாஜக கட்சிகள் தலா இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

நல்லக்கண்ணுவை வீழ்த்திய கோவை மக்கள்!

1971ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலதண்டாயுதம் கோவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு 1998ஆம் ஆண்டு அதிமுக உடனான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் சுப்பையனை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நல்லக்கண்ணுவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார். 

முதல் நேரடி வெற்றியை பதிவு செய்த அதிமுக!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.நாகராஜன் 431,717 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.  கோவை வரலாற்றில் நேரடியாக அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். 

3,89,701 33 வாக்குகளை பெற்ற பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடமும், 2,17,083 வாக்குகளை பெற்ற திமுக வேட்பாளர் கே.கணேஷ்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர். 

சி.பி.ராதாகிருஷ்ணனை வீழ்த்திய பி.ஆர்.நடராஜன்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 571,150 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 31 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.மகேந்திரன் 1,45,104 11 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.கல்யாண சுந்தரம் 60,519 வாக்குகளையும் பெற்று இருந்தனர். 

இந்த முறை யார்?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதியாக மாறி உள்ளது. தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதை முன்கூட்டியே கணித்து இருந்த திமுக, கம்யூனிஸ்ட் வசம் இருந்த கோவை தொகுதியை தன் வசப்படுத்தி கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியது. 

அதிமுக சார்பில் முன்னாள் மேயராக இருந்த  முனைவர் கணபதி ராஜ்குமாரை திமுக வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்துள்ளது. 

வேலுமணியால் கட்டம் கட்டப்பட்ட கணபதி ராஜ்குமாரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிதான் திமுகவுக்கு கொண்டு வந்தார். கோவை வேட்பாளர் தேர்வில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் பரிந்துரை இருந்ததாக கூறப்படுகிறது. 

அதிமுக வேட்பாளராக முன்னாள் சிங்கை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் மகனான சிங்கை ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி களம் இறக்கி உள்ளார். அகமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மை பட்டம் பெற்ற சிங்கை ராமச்சந்திரன், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி வேட்பாளராக சீமானால் நிறுத்தப்பட்டுள்ளார். 

பாஜக சார்பில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் ‘I AM WAITING’ என ட்வீட் செய்து கவனம் ஈர்த்தார். 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியிலும் மீதம் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கைப்பற்றி பலத்தை காட்டி உள்ளது. 

எனவே வெற்றி பெற எல்லா வித்தைகளையும் மூன்று கட்சி வேட்பாளர்களும் செயல்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். 

அடுத்த செய்தி