HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 2019!’ ’மீண்டும் ஹீரோ ஆன மோடியை ஜீரோ ஆக்கிய ஸ்டாலின்!’
“Lok sabha Election 2019: பெயரில் தேர்தல் பரப்புரைகளை பாஜக செய்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், சவுக்கிதார் என்ற பெயரை முன்னொட்டாக சேர்த்துக் கொண்டனர்”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
பிரதமர் ஆன நரேந்திர மோடி!
2014 தேர்தல் முடிவில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 1989ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை, முடிவுக்கு வந்தது.
வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 37 தொகுதிகளை வென்ற அதிமுக, நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக ஆனது.
மோடி ஆட்சியும் சர்ச்சைகளும்!
ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு, வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய பேசுபொருளாய் மாறியது. முறையான திட்டமிடல்கள் ஏதுமின்றி ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பை பாஜக அரசு கொண்டு வந்ததாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.
திருப்புமுனையை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதல்!
2019ஆம் ஆண்டில் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்திய ராணுவத்தின் சாதனைகளை அரசியலுக்காக தமது சாதனையாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இருப்பினும் சவுக்கிதார் என்ற பெயரில் தேர்தல் பரப்புரைகளை பாஜக செய்தது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், சவுக்கிதார் என்ற பெயரை முன்னொட்டாக சேர்த்துக் கொண்டனர்.
மீண்டும் வென்ற மோடி!
303 தொகுதிகளில் வென்று பாஜக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 52 இடங்களிலும், திமுக 24 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பாஜகவை ஜீரோ ஆக்கிய தமிழ்நாடு!
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணியில் தேனி தொதியில் இருந்து அதிமுகவின் ரவிந்திரநாத் வெற்றி பெற்றார். இருப்பினும் நேரடியாக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
கடந்த 2014 தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல், தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது நினைவுக்கூறத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெரும்பான்மை பெறும் அளவுக்கான இடங்களை அதிமுக வென்று எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
டாபிக்ஸ்