தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ மாமனிதர்களை நினைவுகூரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

Coimbatore: லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ மாமனிதர்களை நினைவுகூரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 18, 2023 03:01 PM IST

கோவை மாநகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள், தொழில் முன்னோடி என 33 தலைவர்களின் உருவப்படங்கள் ‘லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ என்ற பெயரில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி (கோவை)
ஸ்மார்ட் சிட்டி (கோவை)

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம், குளக்கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை கவரும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ். புரம் , டி.பி. சாலை எனப்படும் திவான் பகதூர் சாலையின் இருபுறமும் கோவையின் மாமனிதர்களை நினைவுகூரும் சாலையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி நிர்வாகம் மாற்றியுள்ளது. சாலையின் இருபுறமும் கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், தொழில் முன்னோடிகள், சமூக பணியாற்றியவர்கள் என 33 தலைவர்களின் உருவப்படங்கள் ‘லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவர்களை பற்றி அறியும் வகையில் அவர்களின் சுருக்கமான வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது. இது அப்பகுதி வழியாக செல்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இன்றைய நவீன கோவையை உருவாக்கியவர்களில் முதன்மையானவரான தொழிலதிபர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரும், நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவருமான டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டி, முதல் நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் இருந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கூட்டுறவு இயக்கத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தவருமான டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், மெட்ராஸ் பிரசிடெண்ட்சியின் கல்வி அமைச்சராக இருந்த டி.எஸ். அவினாசிலிங்கம், விஞ்ஞானி, தொழில் முனைவோர், பொறியாளர், கோவையில் பேருந்து சேவையை துவக்கியவர் என பன்முக தன்மை கொண்ட ஜி.டி.நாயுடு, கோவையின் அடையாளமாக உள்ள டவுன்ஹால் மணிக்கூண்டு கோவை நகராட்சி தலைவராக இருந்த ராவ் பகதூர் ஏ.டி. திருவேங்கடசாமி நினைவாக அமைக்கப்பட்டது. 

இதில் அவர்கள்  குறித்த முக்கிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது கோவையின் வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாங்கள் வாழும் கோவை மண்ணின் வரலாறு குறித்தும், இதற்கு அடித்தளம் இட்டவர்கள் குறித்தும் இளைஞர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்