தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India First Innings: சஞ்சு சாம்சன் அதிரடி அரை சதம்.. இது அவருக்கு எத்தனையாவது அரை சதம் தெரியுமா?

India first innings: சஞ்சு சாம்சன் அதிரடி அரை சதம்.. இது அவருக்கு எத்தனையாவது அரை சதம் தெரியுமா?

Manigandan K T HT Tamil

Jul 15, 2024, 02:36 PM IST

google News
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது. (AP)
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது.

இந்தியா vs ஜிம்பாப்வே 5 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா முதலில் விளையாடியது.

யஷஸ்வி, கில் ஆகியோர் பெரிதாக ரன் பதிவு செய்யவில்லை.

ஆனால், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.

ரியான் பராக், 22 ரன்களும், ஷிவம் துபே 26 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடவுள்ளது.

பிசிசிஐ பதிவு

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வெற்றிகரமான வேகத்தைத் தொடரவும், தொடரை உயர்வாக முடிக்கவும் ஷுப்மன் கில் அண்ட் கோ முயற்சித்து வருகிறது. நான்காவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனதால், மூன்று துறைகளிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் புதிய தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் 156 ரன்கள் என்ற குறைபாடற்ற தொடக்க கூட்டணியுடன் ஜிம்பாப்வேயை திணறடித்தனர்.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் இளம் பவுலர் துஷார் தேஷ்பாண்டே அறிமுக வீரராக களமிறங்கினார்.

முன்னதாக, 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராசா 46, தடிவானாஷே மருமணி 32, வெஸ்லி மாதேவேரே 25 ரன்கள் அடித்தார்கள்.

இந்திய பவுலர்களில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

153 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சவாலான இலக்காக இருந்த நிலையில், சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 10 விக்கெட்டுகள் 28 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

ஜெய்ஸ்வால் - கில் அதிரடி

இந்திய அணியில் ஓபனர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஆகியோர் தொடக்கத்தில் இருந்த அதிரடியாக பேட் செய்தனர். அதிலும் ஜெயஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்து வெளுத்து வாங்கினார்.

ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 65 என இருந்தது.

ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தவுடன், தனது அதிரடி வேட்டையை தொடங்கி கில் தன் பங்குக்கு பவுண்டரி சிக்ஸர்கள் என அடித்து துவம்சம் செய்தார். கில் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி