Olympic Medal Winning Wrestlers: இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் லிஸ்ட் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Olympic Medal Winning Wrestlers: இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் லிஸ்ட் இதோ

Olympic Medal Winning Wrestlers: இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் லிஸ்ட் இதோ

Jul 14, 2024 07:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 14, 2024 07:45 AM , IST

  • ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை மல்யுத்தப் போட்டியில் இருந்து இந்தியாவுக்கு ஏழு  பதக்கங்கள் கிடைத்துள்ளன. இது ஹாக்கிக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைத்த லிஸ்டில் மல்யுத்தம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் ஆண்கள் ஹாக்கி ஆதிக்கம் செலுத்துகிறது, அதே சமயம் மல்யுத்தம் விளையாட்டில், அணி அல்லாத நிகழ்வுகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியுள்ளது.. இந்திய மல்யுத்த வீரர்கள் இதுவரை ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளனர், அதில் ஆறு பதக்கங்கள் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து வந்தவை.

(1 / 7)

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் ஆண்கள் ஹாக்கி ஆதிக்கம் செலுத்துகிறது, அதே சமயம் மல்யுத்தம் விளையாட்டில், அணி அல்லாத நிகழ்வுகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியுள்ளது.. இந்திய மல்யுத்த வீரர்கள் இதுவரை ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளனர், அதில் ஆறு பதக்கங்கள் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து வந்தவை.(AFP)

கே.டி.ஜாதவ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆவார், இதன் மூலம் ஹாக்கியைத் தவிர இதர விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைக் கொண்டு வந்தார். நாட்டின் சுதந்திரம் அடைந்த பிறகு முதல் தனிநபர் பதக்கமாக இது அமைந்தது.  1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் பாண்டம் வெயிட் ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் பங்கேற்று கே.டி.ஜாதவ் வெண்கலம் வென்றார். 

(2 / 7)

கே.டி.ஜாதவ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆவார், இதன் மூலம் ஹாக்கியைத் தவிர இதர விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தைக் கொண்டு வந்தார். நாட்டின் சுதந்திரம் அடைந்த பிறகு முதல் தனிநபர் பதக்கமாக இது அமைந்தது.  1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் பாண்டம் வெயிட் ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் பங்கேற்று கே.டி.ஜாதவ் வெண்கலம் வென்றார். (Olympics)

அடுத்த மல்யுத்தப் பதக்கம் அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 66 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் சுஷில் குமார் வெண்கலம் வென்றதன் மூலம் கிடைத்தது. பின்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 66 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார், இதன் மூலம் தொடர்ச்சியா ஒலிம்பிக்கில் இரண்டு முறை தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆனார்.

(3 / 7)

அடுத்த மல்யுத்தப் பதக்கம் அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2008 இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 66 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் சுஷில் குமார் வெண்கலம் வென்றதன் மூலம் கிடைத்தது. பின்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 66 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார், இதன் மூலம் தொடர்ச்சியா ஒலிம்பிக்கில் இரண்டு முறை தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆனார்.(PTI)

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பெய்ஜிங்கில் பதக்கம் அருகே சென்று நழுவவிட்ட நிலையில். அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் சுஷில் மற்றும் ஜாதவ் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

(4 / 7)

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பெய்ஜிங்கில் பதக்கம் அருகே சென்று நழுவவிட்ட நிலையில். அடுத்த நான்கு ஆண்டுகள் கழித்து லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் சுஷில் மற்றும் ஜாதவ் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சாக்‌ஷி மாலிக் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வறட்சியை முறியடித்தார்

(5 / 7)

2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சாக்‌ஷி மாலிக் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வறட்சியை முறியடித்தார்(Getty Images)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்

(6 / 7)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்(REUTERS)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ரவி தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ரவி மற்றும் பஜ்ரங் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறினர்

(7 / 7)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ரவி தஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ரவி மற்றும் பஜ்ரங் இருவரும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறினர்

மற்ற கேலரிக்கள்