தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Constipation Remedy Drink This Only On Sunday Get Rid Of Constipation And Stay Active Throughout The Week

Constipation Remedy : ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை குடிங்க; மலச்சிக்கல் நீங்கி வாரம் முழுவதும் சுறுசுறுப்பு தரும்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 12:50 PM IST

Constipation Remedy : ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை குடிங்க; மலச்சிக்கல் நீங்கி வாரம் முழுவதும் சுறுசுறுப்பு தரும்!

Constipation Remedy : ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை குடிங்க; மலச்சிக்கல் நீங்கி வாரம் முழுவதும் சுறுசுறுப்பு தரும்!
Constipation Remedy : ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதை குடிங்க; மலச்சிக்கல் நீங்கி வாரம் முழுவதும் சுறுசுறுப்பு தரும்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும். சிலருக்கு தினமும் மலம் கழித்தாலும், வயிற்றில் இருந்து மலம் முழுமையாக வெளியேறாது. சரியான முறையில் மலம் வெளியேறவில்லையென்றால், அது வயிற்றிலே தங்கி நாளடைவில் வயிறு உப்புசம், தொப்பை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

வாய் துர்நாற்றம், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே வாரத்தில் ஒருமுறை வயிற்றை சுத்தப்படுத்தி தேங்கியுள்ள மலத்தை வெளியேற்றிவிடவேண்டும். அவ்வாறு செய்யும்போது நீங்கள் வாரம் முழுவதும் சுறுசுறுப்பை உணர்வீர்கள். மேலும் அது பசியை அதிகரிக்கும். வயிற்றில் உள்ள பூச்சியை வெளியேற்றும்.

இதை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கொதிக்கும் தண்ணீர் – அரை டம்ளர்

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

புதினா இலைகள் – 4

உப்பு – கால் ஸ்பூன்

விளக்கெண்ணெய் – அரை ஸ்பூன்

(வயிற்றை முழுமையாக சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றில் தங்கியிருக்கும் பூச்சிகள், வயிற்றில் தேங்கியிருக்கும் மலம் என அனைத்தையும் நன்றாக வெளியேற்றிவிடும். அடிவயிற்றில் தங்கியுள்ள கழிவுகளையும் இது வெளியற்றிவிடும்)

செய்முறை

கொதிக்கும் தண்ணீரில், எலுமிச்சை சாறு, புதினா இலைகள், உப்பு மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்பூனில் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய் அடர்த்தியானது. அது தண்ணீருடன் எளிதில் கலக்காது அதனால்தான் கொதிக்கும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக சூடாக இருக்கும்போது குடிக்கக்கூடாது. மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். அடுத்து ஒரு மணி நேரம் வேறு எதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை பருகி அடுத்த ஒரு மணி நேரத்தில் வயிறில் உள்ள மலம் நன்றாக வெளியேறிவிடும். 3 முதல் 4 முறை மலம் வெளியேறிவிடும். பின்னர் நீங்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம்.

அது இட்லி போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவாக இருக்க வேண்டும். மதியம் நீங்கள் எந்த உணவும் சாப்பிடலாம். காரம் நிறைந்த உணவுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள்.

இதை 5 வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கால் டம்ளர் தண்ணீர்தான் கொடுக்கவேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓம வாட்டரே போதுமானது. அது அவர்களின் வயிற்றில் உள்ள மலத்தை சுத்தமாக வெளியேற்றிவிடும்.

இதை பருகிவிட்டு, புதினா இலைகளையும் மென்று சாப்பிடவேண்டும். வாரத்தில் ஒருமுறை இதை பருகினால் வாரம் முழுவதும் இது உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும்.

இதை எடுத்துக்கொள்ளும்போது, வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், அஜீரண கோளாறு, வாய் துர்நாற்றம் போன்ற அனைத்தும் இருக்காது.

பெரியவர்கள் வாரம் ஒருமுறையும், சிறியவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

கர்ப்பத்துக்கு முயற்சிப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எடுக்கக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீர் பருகும்போது, அது உங்கள் வயிற்றை பிரட்டிவிட்டு கருவை கலைத்துவிடும்.

WhatsApp channel