தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srh Vs Csk: 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; துள்ளிக்குதித்த காவ்யா மாறன்

SRH vs CSK: 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி; துள்ளிக்குதித்த காவ்யா மாறன்

Marimuthu M HT Tamil

Apr 05, 2024, 11:44 PM IST

google News
SRH vs CSK: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது.
SRH vs CSK: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது.

SRH vs CSK: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது.

SRH vs CSK: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடந்த இன்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது லீக் ஆட்டமானது இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இப்போட்டியானது ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.

அதன்பின் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். அதில் 12 ரன்கள் எடுத்திருந்தபோது, குமாரின் பவுலிங்கில் ரச்சின் அடித்த பந்து, மர்க்ரம்மிடம் கேட்ச் ஆனது.

அடுத்து களமிறங்கிய அஜின்கியா ரஹானே கொஞ்சம் நிலைத்து நின்று ஆடினார். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் சஹ்பஸ் அகமதுவின் பந்தில், 26 ரன்கள் எடுத்திருந்தபோது, அப்துல் சமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரஹானேவும் உனாட்கட்டின் பந்தில், 35 ரன்கள் எடுத்து இருந்தபோது, மார்க்கண்டேயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே மிரட்டினார். அதில் ஆறு சிக்ஸ், 2 பவுண்டரிகளும் அடக்கம். 24 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்தபோது, கம்மின்ஸின் பவுலிங்கில் குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா, ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறங்கி, 31 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன்பின், மிட்செல் 13 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜனின் பந்தில் அவுட்டானார். இறுதியாக களமிறங்கிய எம்.எஸ். தோனி, ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இன்றைய ஆட்டத்தை நிறைவு செய்தார். இறுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்துவிக்கெட் இழப்புக்கு, 165 ரன்களை எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில், புவனேஸ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ், ஷபஸ் அகமது, உனட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம், மொத்தமாக ஐந்து விக்கெட்களை எடுத்தனர்.

அதன்பின், 166 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவர் களமிறங்கினர். அதில் டிராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவர் ஒரு சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்து, 24 பந்தில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, தீக்‌ஷனாவின் பந்தில் அவுட்டானார்.

அடுத்து ஆடிய அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 4 சிக்ஸ் மற்றும் மூன்று பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் எடுத்திருந்தபோது, சஹார் பந்தில், ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பின், ஏடன் மக்ரம் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் அடுத்தடுத்து நிதானமாக ஆடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். குறிப்பாக, 36 பந்துகளில் ஏடன் மக்ரம், ஒரு சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் அடித்தார். ஆனால் அரை சதம் விளாசிய மகிழ்ச்சி நிலைப்பதற்குள், அலியின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதன்பின், ஷபஸ் அஹமதுவும் 18 ரன்கள் எடுத்திருந்தபோது, எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.

அதன்பின் ஐந்தாவது ஆக களமிறங்கிய கிளசன் 10 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 14 ரன்களும் அடித்து, 18.1 ஓவர் முடிவில் வெற்றி இலக்கான 166 ரன்களை எட்டியது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி