கேப்டனாக மீண்டும் தோனி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  கேப்டனாக மீண்டும் தோனி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

கேப்டனாக மீண்டும் தோனி! எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Karthikeyan S HT Tamil
May 01, 2022 06:37 PM IST

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் 46-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது.

<p>தோனியுடன் ஜடேஜா (PTI)</p>
<p>தோனியுடன் ஜடேஜா (PTI)</p>

புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் தோல்வியை தழுவியது. அனுபவ வீரரான தோனி, களத்தில் ஜடேஜாவுக்கு பல ஆலோசனைகளை வழங்கினாலும், அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததை கண்டு ரசிகர்கள் வேதனனையடைந்தனர்.

மேலும் கேப்டனான ஜடேஜாவும், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என மூன்றிலும் கோட்டைவிட்டார். இதனையடுத்து, தனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், கேப்டன் பொறுப்பை தோனி வசமே கொடுத்துவிடுங்கள் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஜடேஜா கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட சிஎஸ்கே அணி நிர்வாகம், தோனியை மீண்டும் கேப்டனாக்கியுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே படை இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. புணேயில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. மிகவும் முக்கியமான இந்தப் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணியிடம் ஏற்கனவே தோல்வியுற்ற சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்த இயலும். சன்ரைசர்ஸ் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4 இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஹைதராபாத்தின் பலமே வேகப்பந்து வீச்சு தான்.

புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், ஜான்சென் போன்ற சிறந்த வேகப்பந்து வீரர்கள் அந்த அணிக்கு பக்க பலமாக உள்ளனர். அதிலும் உம்ரான் மாலிக் சராசரியாக ஒவ்வொரு பந்தையும் 150+ கிமீ வேகத்தில் வீசுகிறார். இதனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் நிலை தடுமாறி சரிகின்றனர். நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.