Ruturaj Gaikwad: 'ஷிவம் துபே பேட்டிங் மேம்படுத்தலுக்கு தோனி அதிக பங்காற்றினார்': ருதுராஜ் கெய்க்வாட்
Gaikwad: ஷிவம் பேட்டிங் மேம்படுத்துதலுக்கு எம்.எஸ்.தோனி தனிப்பட்ட முறையில் அதிக பங்களிப்பை கொடுத்துள்ளார் என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். ஷிவம் துபே நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் விளாசியதுடன் ஆட்டநாயகன் விருது வென்றார். சிஎஸ்கேவின் வெற்றிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார்.

எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட். (AP Photo/R. Parthibhan) (AP)
"ஷார்ட் பாலுக்கு எதிராக சிவம் துபே தனது பலவீனத்தை சரிசெய்துள்ளார். மகேந்திர சிங் தோனி தனிப்பட்ட முறையில் அவரது பேட்டிங்கில் அதிக மேம்படுத்துதலை செய்துள்ளார் " என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தியதில் துபே முக்கிய பங்கு வகித்தார்.
இடது கை பேட்ஸ்மேனான துபே, தனது 23 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்தார், ஆர்சிபிக்கு எதிரான தொடக்க வெற்றியில் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார், மேலும் அவரது விளையாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அவர் ஷார்ட்பாலை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பதுதான்.