RR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
May 12, 2024, 05:33 PM IST
RR vs CSK: ஐபிஎல் போட்டியில், 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
RR vs CSK: 17ஆவது ஐ.பி.எல் சீசனில், 61ஆவது லீக் ஆட்டம், சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடந்து வருகிறது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால், 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸின் சிமர்ஜீட் சிங்கின் பந்தில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன்பின்னர், அவரது சக பார்ட்னர் வீரரான ஜோஸ் பட்லர் 21 ரன்களை எடுத்தபோது, அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சிமர்ஜீட் சிங்கின் பந்தில், தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மூன்றாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி 19 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தபோது, சிமர்ஜீட் சிங்கின் பந்தில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
நான்காவதாக ரியான் பராக்கும், ஐந்தாவதாக துருவ் ஜுரெல்லும் களமிறங்கினர். இதில் ரியான் பராக் நிதானமாக ஆடி, 35 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இணை வீரரான துர்வ் ஜுரெல் 18 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தபோது, தேஷ்பாண்டேவின் பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால், அதன்பின் வந்த ஷிவம் துபே ரன் எதுவும் எடுக்காமல் தேஷ்பாண்டேவின் பந்தில் டக் அவுட் ஆனார். ஏழாவதாகவும் இறுதியாகவும் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தற்போது இருக்கும் கூகுள் பிட்ச் அறிக்கை:
தற்போது இருக்கும் நிலவரத்தின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 விழுக்காடு வெற்றி பெறுவதற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 82 விழுக்காடு வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் விவரம்:
யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், துர்வ் ஜுரெல், சுபம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், அவேஸ் கான், சந்தீப் சர்மா, யுவேந்திர சஹால்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டர்ல் மிட்செல், மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீட் சிங், மஹேஷ் தீக்ஷனா,
CSK vs RR பிட்ச் அறிக்கை
மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. மைதானம் வறண்டு இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். ஆனால், ஆட்டம் விறுவிறுப்பாகும்போது, சுழற்பந்து சங்கடத்தினை தருகிறது. இது பிற்கால இன்னிங்ஸில் பேட்டிங்கை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.
யார் பலம் பொருந்திய அணி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் 4ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் கடைசி வெற்றி ஐபிஎல் 2021-ல் தான் சாத்தியமானது.