தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Kkr Vs Rr: கொல்கத்தா நைட் ரைடர்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Marimuthu M HT Tamil
Apr 17, 2024 12:44 AM IST

KKR vs RR: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கு இடையே நடைபெற்றபோட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஏப்ரல் 16, 2024அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியின் போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்
ஏப்ரல் 16, 2024அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியின் போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஸ் பட்லர் 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்பின், டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட்டும் சுனில் நரைனும் களத்தில் குதித்தனர். அதில், பில் சால்ட் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். சுனில் நரைனோ 56 பந்துகளுக்கு 109 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு சிக்ஸ்கள், 13 பவுண்டரிகள் அடக்கம். அப்படியிருக்க,சுனில், போல்ட்டின் பந்தில் அவுட்டானார். பின்னர் மூன்றாவது வீரராக அங்கிரிஷ் ரகுவன்ஷி இறங்கினார். இதில் அவர் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். சென்னின் பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து, ரகுவன்ஷி பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் நான்காவது வீரராக களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சரியாக ஆடாமல் 11 ரன்கள் எடுத்தபோது, சாஹல் பவுலிங்கில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அதன்பின், ஆண்ட்ரூ ருஸெல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ராமந்தீப் சிங் ஆகியோர் முறையே 13 ரன்கள், 20 ரன்கள், 8 ரன்கள் மற்றும் ஒரு ரன் எடுத்தனர். இதில் உதிரியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. மொத்தமாக, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்கள் எடுத்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அவேஸ் கான் 2 விக்கெட்டுகளும், குல்தீப் சென் 2 விக்கெட்ட்களும் சாய்த்தனர். போல்ட் தலா ஒரு விக்கெட்டும், சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின், 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஷ்வி ஜெய்ஷ்வல் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இரு வீரர்கள் தொடக்கத்தில் களமிறங்கினர். ஜெய்ஷ்வல் 19 ரன்கள் எடுத்திருந்தபோது, அரோரா பந்தில் வி.ஆர்.ஐயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய ஜோஸ் பட்லர் 60 பந்துகளுக்கு 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.

மூன்றாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், 12 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்ஷித் ரானாவிடம் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின், நான்காவது வீரராக களமிறங்கிய ரியான் பராக் 34 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

துருவ் ஜுரெல் 2 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மெயர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இருந்தாலும், ரோவ்மன் பவெல் நிதானித்து ஆடி, 13 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்தார். போல்ட், அவேஸ் கான் இருவரும் பூஜ்ஜியம் ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர்.

மொத்தத்தில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 224 ரன்களை எடுத்து இரண்டு விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

IPL_Entry_Point