IPL Throwback: பைனல் ஓவரில் மட்டும் தோனி அடித்த சிக்ஸர்கள் எவ்வளவு தெரியுமா? IPLலில் பேட்ஸ்மேன்களின் தனித்துவ சாதனைகள்
Mar 16, 2024, 06:00 AM IST
ஐபிஎல் பைனல் ஓவர் பினிஷில் யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் எம்.எஸ். தோனி. இவரை போல் ஐபிஎல் போட்டிகளில் தனித்துவ சாதனைகள் புரிந்த மற்ற பேட்ஸ்மேன்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வீரர்கள் சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிகளிலும் ஏதாவதொரு புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையான விஷயம் தான்.
அந்த வகையில் அதிரடியால் வானவேடிக்கை காட்டி பவுண்டரி, சிக்ஸர்கள் என எதிரணி பவுலர்கள் வெளுத்து வாங்கி அணிக்கு வெற்றியை தேடி தரும் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியிருக்கும் தனித்துவ சாதனைகள் பற்றி பார்க்கலாம்
ஒரே பிரான்சைஸ்காக அடித்த அதிக ரன்கள்
ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் தற்போது வரை ஒரே அணியில் விளையாடி வரும் வீரராக விராட் கோலி உள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலி ஐபிஎல் கேரியரில் அடித்திருக்கும் 7 ஆயிரம் ப்ளஸ் ரன்களும் ஆர்சிபிக்காக அடித்த தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
ஐபிஎல் பைனல்களில் அதிக ஸ்கோர்
ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேனாக இருப்பவர் ஷேன் வாட்சன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 பைனலில் அவர் அடித்த 117 ரன்கள் தான் ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு பேட்ஸ்மேனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
இவருக்கு முன்னர் 2014 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விருத்திமான் சாஹா 115 ரன்கள் அடித்தார். ஆனால் இந்த போட்டியில் எதிரணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது
மூன்று முறை ஆரஞ்சு தொப்பி
அதிக ரன்கள் அடிக்கப்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை மூன்று முறை வென்ற ஒரே பேட்ஸ்மேனாக டேவிட் வார்னர் உள்ளார். சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய வார்னர் 2015 சீசனில் 562 ரன்கள், 2017 சீசனில் 641 ரன்கள், 2019 சீசனில் 632 ரன் அடித்து முறையே அந்தந்த சீசன்களில் டாப் ஸ்கோரராக இருந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெய்ல் 2011, 2012 ஆகிய சீசன்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார்.
அதிக சதங்கள்
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த அணியாக ஆர்சிபி உள்ளது. அந்த அணி சார்பில் மொத்தம் 17 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 சதங்களை விராட் கோலி மட்டுமே அடித்திருப்பது தனிச் சிறப்பு
பைனல் ஓவர் பினிஷ்
சந்தேகமே இல்லாமல் இதில் சிஎஸ்கே கேப்டனும், உலகின் சிறந்த பினிஷருமான எம்.எஸ்.தோனிதான் உள்ளார்.
ஆட்டத்தின் 20வது ஓவரில் மட்டும் இவர் 715 ரன்கள், 242.74 ஸ்டிரைக் ரேட்டுடன் அடித்துள்ளார். அத்துடன் 59 சிக்ஸர்களை தனது பைனல் ஓவர் பேட்டிங்கில் அடித்துள்ளார். வேறு யாராலும் நெருங்க கூட முடியாத சாதனையாக இது அமைந்துள்ளது.
இது தவிர ஐபிஎல் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனால் நிகழ்த்தப்பட்டிருக்கும் தனித்துவ சாதனைகளில் முக்கியமானதாக, கொல்கத்தா ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், ஐபிஎல் போட்டிகளில் 170க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேனாக உள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 174 ஆகும்.
அதேபோல் ஒரே இன்னிங்கிஸில் அதிக சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனாக கிறிஸ் கெய்ல் 17 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் 15க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் ஒரே இன்னிங்ஸில் அடித்தது கிடையாது.
டாபிக்ஸ்