David Warner: ஆஸ்திரேலியாவில் எதிரொலித்த அயோத்தி ராமர்.. கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டேவிட் வார்னர்!
உலகம் முழுவதும் டிவி சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிரம்மாண்ட திரைகளில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று (ஜன.22) கோலாகலமாக நடைபெற்றது. மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காவி கொடிகளுடன் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தப்பட்டது. கனடாவில் உள்ள இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் டவர் முன்பு பெருந்திரளான இந்துக்கள் குவிந்து ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடினர்.
கனடா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேசியா, தைவான், மெக்சிகோ, கென்யா உள்ளிட்ட நாடுகளிலும் ராமர் கோயில் திறப்பு விழாவை இந்துக்கள் கொண்டாடினர். பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயில்களிலும் ராமர் கோயில் திறப்பு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் டிவி சேனல்கள், இணையதளங்கள் மற்றும் பிரம்மாண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை கோடிக்கணக்கான மக்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா தொடர்பாக 'ஜெய் ஸ்ரீராம் இந்தியா' என பதிவிட்டுள்ளார். வார்னரின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்ததை கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி தங்களது கருத்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அனுபம் கெர், சுமன், அபிஷேக் பச்சன், ராம்சரண், தனுஷ், மாதுரி தீட்சித், கங்கணா ரனாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல், கேத்ரினா கைஃப், பாடகர்கள் சங்கர் மகாதேவன், ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்