Chris Gayle Oh Fathima Song: பாலிவுட் டாப் நடிகையுடன் டான்ஸ் ஆட விரும்பும் கிறிஸ் கெய்ல் - யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chris Gayle Oh Fathima Song: பாலிவுட் டாப் நடிகையுடன் டான்ஸ் ஆட விரும்பும் கிறிஸ் கெய்ல் - யார் தெரியுமா?

Chris Gayle Oh Fathima Song: பாலிவுட் டாப் நடிகையுடன் டான்ஸ் ஆட விரும்பும் கிறிஸ் கெய்ல் - யார் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 23, 2023 11:36 PM IST

ஓ ஃபாத்திமா என்ற பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், பாலிவுட் டாப் நடிகையான தீபிகா படுகோனவுடன் நடனமாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஓ ஃபாத்திமா என்ற சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்
ஓ ஃபாத்திமா என்ற சிங்கிள் டிராக் பாடலை வெளியிட்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்

இதற்கு பதில் அளித்த அவர், " நான் தீபிகா படுகோனேவை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளேன். மிகவும் அருமையான பெண்மனி அவர். அவருடன் ஒரு பாடலில் இணைந்து ஆட விரும்புகிறேன்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டுக்குள் அடைந்து இருந்தபோது மியூசிக் அமைக்க வேண்டும் என தூண்டுதல் உருவானது. அப்போது நண்பர் ஒருவர் இணைந்து பாடல் செய்யலாம் என்றார். அப்போது எனது வீட்டில் வைத்து பாடல் ஒன்றை உருவாக்கினோம். ஜமைக்கா மக்கள் அந்த பாடலுக்கு அளித்த வரவேற்பால் நான் ஈர்க்கப்பட்டேன்.

பின்னர் வீட்டிலேயே ஸ்டுடியோ செட்டப் செய்து, இசை துறையில் உள்ள பிரபலங்களுடன் கைகோர்த்து மற்றொரு பாடலையும் உருவாக்கினேன்.

இனி கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் எனக்கு இருக்காது என்பதால் பாடகராக ஜொலிக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல பாடகர், கம்போஸரான அர்கோ பிராவோ முகர்ஜியுடன் இணைந்து கிறிஸ் கெய்ல் பாடியிருக்கும் இந்த பாடலில் உஸ்பெகிஸ்தான் பிரபலம் கரினா கர்ரா நடித்துள்ளார். இந்த பாடல் ஜமைக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.