தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkrvssrh: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய கேகேஆர்.. இறுதிச்சுற்றுக்கு செல்லும் கொல்கத்தா

KKRvsSRH: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய கேகேஆர்.. இறுதிச்சுற்றுக்கு செல்லும் கொல்கத்தா

Marimuthu M HT Tamil

May 23, 2024, 06:50 PM IST

google News
KKRvsSRH: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. (ANI)
KKRvsSRH: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

KKRvsSRH: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

KKRvsSRH: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் மேட்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரின், முதல் குவாலிஃபயர் போட்டி, குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் வெற்றி பெறும் அணி ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிடும் என நிர்ணயிக்கப்பட்டது. எனவே, முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வெற்றிபெறும் முனைப்பில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 159 ரன்களை எடுத்தது. 

அதன்படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் எந்தவொரு ரன்னும் எடுக்காமல், ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார். அணியின் இரண்டாவது வீரராக களம் இறங்கிய அபிஷேக் வர்மா, 3 ரன்கள் எடுத்தபோது அரோராவின் பந்தில் ருஸ்ஸெல்லிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. 3ஆவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால், 55 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் செய்யப்பட்டார். 4ஆவது ஆக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, ஸ்டார்க்கின் பந்தில் 9 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். ஷபஸ் அகமது ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு:

ஹென்ரிச் க்ளசென் 32 ரன்கள் எடுத்தபோது, வருணின் பந்தில், சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேலும், அப்துல் சமது 16 ரன்களை எடுத்தபோது, ஹர்ஷித் ரானாவின் பந்தில் எஸ்.எஸ்.ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மேலும், அதன்பின் சன்வீர் சிங் ரன் எதுவும் எடுக்காமலும், அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் 30 ரன்களும், புவனேஸ்வர் குமார் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார். விஜயகாந்த் வியாஷ்காந்த் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 19.3 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. 

கொல்கத்தா அணியின் சார்பில் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

சேஸிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

அதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆரம்பம் முதலே நிதானமாக ஆடியது. கொல்கத்தா அணியின் ரஹ்மனுல்லா குர்பஸ் 23 ரன்களும், சுனில் நரைன் 21 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினாலும், அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பாக ஆடி, அரை சதம் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து,13.2 ஓவர்களில் இலக்கை தாண்டி, 164 ரன்களை எடுத்து அபாரவெற்றி பெற்றது.

குறிப்பாக, வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 51 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 24 பந்துகளுக்கு 5 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடித்து, 58 ரன்களை எடுத்தார். அதாவது 13.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 164 ரன்கள் எடுத்து வென்றது. 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில், நடராஜ் 1 விக்கெட்டும், பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இதன்மூலம் கொல்கத்தா அணி இறுதிச்சுற்றுக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 38 பந்துகள் எஞ்சியிருக்க தகுதிபெற்றது. 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி