GTvsKKR: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்போட்டியில் வெல்வது யார்?;வாய்ப்புகள் யாருக்கு அதிகம்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Gtvskkr: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்போட்டியில் வெல்வது யார்?;வாய்ப்புகள் யாருக்கு அதிகம்!

GTvsKKR: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்போட்டியில் வெல்வது யார்?;வாய்ப்புகள் யாருக்கு அதிகம்!

Marimuthu M HT Tamil
May 13, 2024 06:20 AM IST

GTvsKKR: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மே 13ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

GTvsKKR: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்போட்டியில் வெல்வது யார்?;வாய்ப்புகள் யாருக்கு அதிகம்!
GTvsKKR: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்போட்டியில் வெல்வது யார்?;வாய்ப்புகள் யாருக்கு அதிகம்!

12 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மே 11 அன்று, பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை கேகேஆர்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி) பெற்றது. கேகேஆர் அணி, தான் விளையாடிய 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் நிலைத்து நின்று புள்ளிப் பட்டியலில் நீடிக்க முடியும்.

ஜிடி மற்றும் கேகேஆர் நேருக்கு நேர் மோதல்கள்:

குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஜிடி அணி 2 முறையும், கேகேஆர் அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தாவுக்கு எதிராக இதுவரை ஜி.டி.யின் அதிகபட்ச ஸ்கோர் 204 ஆகும். டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 207 ஆகும்.

இந்த அணிகள் கடைசியாக ஏப்ரல் 2023இல் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடின. 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் வீரர் ஜோஷுவா லிட்டில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதில் ஜிடி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிடி மற்றும் கேகேஆர் வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியல்:

சுப்மன் கில் (கேப்டன்), ரஷீத் கான் (துணை கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, சாய் கிஷோர், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி.

GT vs KKR பிட்ச் அறிக்கை:

அகமதாபாத் ஸ்டேடியம், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஆட்டமானது, அதிக ஸ்கோர் செய்யப்பட்ட போட்டியாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிடி அணி 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் தலா சதம் அடித்தனர். ஆனால், எதிர்முனையில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.

GT vs KKR வானிலை:

அகமதாபாத்தில் வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 44% ஆக இருக்கும். AccuWeather- இணையதள கூற்றின்படி, மழை பெய்ய 56% வாய்ப்பு உள்ளது.

GT vs KKR கணிப்பு:

கூகுளின் வெற்றி வாய்ப்பின்படி, கொல்கத்தா தனது 13ஆவது போட்டியில் குஜராத்தை வெல்ல 56% வாய்ப்பு உள்ளது. அதேநேரம், கேகேஆர், ஜிடியை வீழ்த்தும் என்று நாங்களும் நம்புகிறோம். அப்படி வென்றால், 20 புள்ளிகளுடன், அவர்கள் புள்ளிகள் அட்டவணையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.