தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  சிறந்த உள்கட்டமைப்புடன் இருக்கிறது தமிழ்நாடு..செளராஷ்ட்ரா கிரிக்கெட் வீரர் உனத்கட் புகழாரம்! அங்க என்ன சத்தம்?

சிறந்த உள்கட்டமைப்புடன் இருக்கிறது தமிழ்நாடு..செளராஷ்ட்ரா கிரிக்கெட் வீரர் உனத்கட் புகழாரம்! அங்க என்ன சத்தம்?

Oct 15, 2024, 04:24 PM IST

google News
சிறந்த உள்கட்டமைப்புடன் இருக்கிறது என்று வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் புகழாரம் செய்துள்ளார். மழையால் தமிழ்நாடு மக்கள் இன்னல்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவரது இந்த பேச்சுக்கான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்
சிறந்த உள்கட்டமைப்புடன் இருக்கிறது என்று வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் புகழாரம் செய்துள்ளார். மழையால் தமிழ்நாடு மக்கள் இன்னல்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவரது இந்த பேச்சுக்கான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்

சிறந்த உள்கட்டமைப்புடன் இருக்கிறது என்று வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் புகழாரம் செய்துள்ளார். மழையால் தமிழ்நாடு மக்கள் இன்னல்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவரது இந்த பேச்சுக்கான பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்

இடது கை வேகபபந்து வீச்சாளராரும், செளராஷ்ட்ரா அணி கேப்டனுமாக இருப்பவர் ஜெயதேவ் உனத்கட். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரை சேர்ந்த இவர் கடைசியாக இந்தியாவுக்காக கடந்த ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

இதன் பிறகு தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் செளராஷ்ட்ரா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை எலைட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடி வருகிறார்.

தமிழ்நாடு - செளராஷ்ட்ரா ரஞ்சி கோப்பை கிரிக்கெட்

ராஞ்சி கோப்பை கிரிக்கெட் விளையாடி வரும் ஜெயதேவ் உனத்கட், அக்டோபர் 11 முதல் 14 வரை தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கோவையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ், 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது மாலை நேரத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கியது. மழை நின்ற பின்னர் மைதான பணியாளர்களின் துரித நடவடிக்கையால் மைதானத்தில் தேங்கிய மழைநீர் முற்றிலும் வடிந்த நிலையில் மறு நாள் காலையில் ஆட்டம் எந்த தாமதமும் இன்றி திட்டமிட்டபடி தொடர்ந்துள்ளது.

இந்த போட்டியில் செளராஷ்ட்ரா அணி தோல்வியை தழுவிய போதிலும், கனமழைக்கு பின்னர் போட்டியை தொடரும் விதமாக மைதானத்தை தயார் செய்த மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஜெயதேவ் உனத்கட் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு உள்கட்டமைப்பு சூப்பர் என புகழாரம்

இதுதொடர்பாக உனத்கட் தனது எக்ஸ் பக்கத்தில் மழை பெய்தபோது மைதானத்தில் மழை நீர் தேங்கியிருந்ததையும், அதன் பின்னர் மழைநீர் வடிந்து விளையாடுவதற்கு உகந்தவாறு மைதானம் மாறியிருப்பதையும் விடியோவாக பகிர்ந்துள்ளார்.

அத்துடன் தனது பதிவில், "1வது ஸ்லைடில் இருந்து 2வது ஸ்லைடு வரை..12 மணி நேரத்தில், அனைத்து நிலை கிரிக்கெட்டுகளுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றுள்ளது.

அதுவே கடந்த கால மற்றும் நிகழ்கால சாம்பியன் கிரிக்கெட் வீரர்களின் அழகிய மரபுக்கு தாயகமாக இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், 3வது நாள் மாலையில் பலத்த மழை பெய்து, 4வது நாள் காலை 9.30 மணிக்கு என சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியதற்கு இடையில் மைதான பராமரிப்பாளர்கள் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்கையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் இதிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். டிஎன்சிஏ செயல்பாடு சிறப்பு" என் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெற்றி

ராஞ்சி கோப்பை எலைட் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற வரும் நிலையில் குரூப் டி பிரிவில் தமிழ்நாடு - செளராஷ்ட்ரா அணிகள் மோதிக்கொண்ட போட்டி அக்டோபர் 11ஆம் தேதி கோவையில் தொடங்கியது. மொத்த 4 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த செளராஷ்ட்ரா அணி 203 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ்நாடு அணி 367 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த செளராஷ்ட்ரா 94 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதனால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளன.

தமிழ்நாடு இடம்பிடிதிருக்கும் குரூப் டி பிரிவில் ரயில்வேஸ், ஜார்க்கண்ட், டெல்லி, சத்திஸ்கர், அசாம், சண்டிகர், செளராஷ்ட்ரா ஆகிய அணிகள் உள்ளன.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை