Jaydev Unadkat: 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த இடது கை பவுலர் உனத்கட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Jaydev Unadkat: 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த இடது கை பவுலர் உனத்கட்

Jaydev Unadkat: 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த இடது கை பவுலர் உனத்கட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 02, 2023 02:32 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று சாதித்துள்ளது இந்திய அணி. இதில் மூன்றாவது போட்டியில் பங்கேற்ற பவுலரான ஜெயதேவ் உனத்கட் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட்  அணியில் கம்பேக் கொடுத்த  ஜெயதேவ் உனத்கட்
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியில் கம்பேக் கொடுத்த ஜெயதேவ் உனத்கட்

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளுக்கு தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் மூன்றாவது போட்டியில் களமிறங்கின.

முன்னதாக, இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியில் சஞ்சு சாம்சன், அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட்டனர். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இருந்தபோதில் தொடர்ந்து மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரோஹித், கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அத்துடன் இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான 31 வயதாகும் ஜெயதேவ் உனத்கட், இந்த போட்டியில் விளையாடிதன் மூலம் 9 ஆண்டு 252 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளார். இது சாதனையாகவே அமைந்தது.

இதற்கு முன்னர் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங், 7 ஆண்டு 230 நாள்கள் கழித்து அகளமிறங்கியது தான் ஒரு நாள் போட்டிகளில் அதிக இடைவெளி விட்டு விளையாடியதாக இருந்தது. அதாவது முதன் முதலில் 1989ஆம் ஆண்டு விளையாடி ராபின் சிங் பின்னர் 1996இல் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் கடைசியாக 2013ஆம் ஆண்டில் இந்திய ஒரு நாள் அணியில் விளையாடினார். இதன் பின்னர் தற்போது 2023இல் மீண்டும் விளையாடியுள்ளார்.

தனது கம்பேக் போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய உனத்கட் 16 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.