Tamil Nadu Space Policy: ’விரைவில் தமிழ்நாடு விண்வெளி கொள்கை வெளியிடப்படும்!’ பேரவையில் அமைச்சர் டிஆர்பி.ராஜா அறிவிப்பு
TN Assembly 2024 Live: பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும் மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இக்கொள்கையில் வகுக்கப்படும்

Tamil Nadu Space Policy: ’விரைவில் தமிழ்நாடு விண்வெளி கொள்கை வெளியிடப்படும்!’ பேரவையில் அமைச்சர் டிஆர்பி.ராஜா அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் வெகு விரைவில் விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று தொழில் மற்றும் முதலீடுகள் ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஜூன் 29ஆம் தேதி இக்கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
