தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rr Vs Mi: சதம் அடித்த ஜெய்ஸ்வால், 5 விக்கெட் வீழ்த்திய சந்தீப்: மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

RR vs MI: சதம் அடித்த ஜெய்ஸ்வால், 5 விக்கெட் வீழ்த்திய சந்தீப்: மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Marimuthu M HT Tamil

Apr 23, 2024, 12:32 AM IST

google News
RR vs MI: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சார்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தும், சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த காரணமாக இருந்தனர். (PTI)
RR vs MI: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சார்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தும், சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த காரணமாக இருந்தனர்.

RR vs MI: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சார்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தும், சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த காரணமாக இருந்தனர்.

RR vs MI: ஐ.பி.எல் தொடரின் 38ஆவது லீக் போட்டி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷானும் ஏமாற்றத்தைத் தந்தனர். ரோஹித் ஷர்மா 6 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் அவுட்டானார். இஷான் கிஷான், சந்தீப் சர்மாவின் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அதன்பின், களமிறங்கிய சூர்ய குமார் யாதவ்,சந்தீப் சர்மாவின் பந்தில் 10 ரன்கள் எடுத்தபோது பெவிலியன் திரும்பினார். நான்காவதாக களமிறங்கிய திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி, 45 பந்துகளுக்கு 65 ரன்கள் விளாசினார். இறுதியாக அவரும் சந்தீப் சர்மாவின் பந்தில் அவுட்டானார்.

இதில் மூன்று சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடக்கம். அதன்பின், இறங்கிய முகமது நபி, 23 ரன்கள் எடுத்தபோது, சாஹலின் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய நேஹல் வதேரா, 49 ரன்கள் எடுத்திருந்தபோது, போல்ட் பந்தில் அவுட்டானார்.

7ஆவது ஆக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 10 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆவேஸ் கானின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின், டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸியின் விக்கெட்டுகளையும் சந்தீப் சர்மாவே கைப்பற்றினார். இறுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி,9 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.இதில் 10 ரன்கள் உதிரி ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சந்தீப் சர்மா, அதிகபட்சமாக 18 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஸ்கோர்களை ஏற்றியது.

அந்த அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 60 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடக்கம். அதன்பின் அவருக்கு ஜோடியாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், சாவ்லாவின் பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது கிளீன் போல்டானார். அதன்பின் மூன்றாவதாக இறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 38 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,18.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில், பியூஷ் சாவ்லா மட்டும் 33 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு, 8 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரவெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் சர்மா மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினார். புள்ளிப்பட்டியலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடிக்கிறது. இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வென்றதால், இந்நிலையில் நீடிக்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்தப்போட்டியில் வென்றதன்மூலம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அடுத்த இடத்தில் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்திலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. நாம் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி