February Sports Rewind: ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.. WPL தொடக்கம்! பிப்ரவரியில் விளைாட்டுத் துறையில் இன்னும் பல
Sports: 2024 பிப்ரவரி மாதம் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம்.

wpl தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக் கானுடன் 5 அணிகளின் கேப்டன்கள் (ANI Photo) (WPL-X)
பிப். 1: மகளிர் டி20ஐ ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக எல்லிஸ் பெர்ரி தேர்வு செய்யப்பட்டார். ஆண்டின் சிறந்த டி20 வீரர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அந்நாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கியது.
பிப். 2: சென்னையில் நடைபெற இருக்கும் ஏடிபி சேலஞ்சர் 100 தொடரில் மொத்தம் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.இந்திய வீரர் ராம்குமார் உள்பட மூன்று பேருக்கு வைல்டு கார்டு என்ட்ரி
பிப். 3: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.