தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  T20 World Cup Warm-up Match: கோலி இல்லை.. வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டம்: 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

T20 World Cup Warm-up Match: கோலி இல்லை.. வங்கதேசத்துடன் பயிற்சி ஆட்டம்: 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Manigandan K T HT Tamil

Jun 02, 2024, 08:44 AM IST

google News
ரோஹித் சர்மாவின் இந்திய அணி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. (Photo- ICC website)
ரோஹித் சர்மாவின் இந்திய அணி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை.

ரோஹித் சர்மாவின் இந்திய அணி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 20224 டி-20 உலகக் கோப்பைக்கான தனது முதல் மற்றும் ஒரே பயிற்சி ஆட்டத்தை நேற்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. ஜூன் 5 ஆம் தேதி அதே இடத்தில் அயர்லாந்துக்கு எதிரான மோதலுடன் இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான மென் இன் ப்ளூவின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக இந்த போட்டி அமைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

கோலி விளையாடவில்லை

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியின் சமநிலையை சரியாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள், அதே நேரத்தில் ஆடுகளத்தின் நிலையை மதிப்பிட்டு செயல்பட்டார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 182 ரன்களை சேர்த்தது.

ரிஷப் பந்த் அரை சதம்

கேப்டன் ரோகித் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 1 ரன்னில் நடையைக் கட்டினார். ரிஷப் பந்த் அரை சதம் விளாசி அசத்தினார்.

சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்தனர். ஷிவம் துபே 14 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா 4 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் மெஹதி ஹசன், இஸ்லாம், மஹ்முதுல்லா, தன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இவ்வாறாக 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 182 ரன்களை குவித்தது.

20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேசம், 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 122 ரன்களில் சுருண்டது.

ஓபனிங் பேட்ஸ்மேன் 17 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷான்டோ டக் அவுட்டானார். அதிகபட்சமாக மஹ்மதுல்லா 40 ரன்கள் எடுத்தார்.அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அள்ளினர்.

பும்ரா, சிராஜ், பாண்டியா, அக்சர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இவ்வாறாக 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது.

குறிப்பாக, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஐபிஎல் 2024 சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தங்கியிருந்த பின்னர் வெள்ளிக்கிழமை அமெரிக்கா திரும்பினார். இருப்பினும், கோலி இதுவரை மூன்று பயிற்சி அமர்வுகளை தவறவிட்டுள்ளார், மேலும் பங்களாதேஷ் மோதலுக்கு அவர் விளையாடவில்லை.

இதற்கிடையில், டி 20 உலகக் கோப்பையின் குழு டி யில் ஒரு பகுதியாக இருக்கும் பங்களாதேஷ், ஜூன் 8 முதல் புளோரிடாவில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடும். 

இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக நேரடியாக கண்டு ரசிக்கலாம். டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைத்தளம் வழியாகவும் நேரடியாக பார்க்கலாம்.

T20 உலகக் கோப்பை 2024க்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி