தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Karungali Maalai : கருங்காலி மாலையை அணிவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்!

Benefits of Karungali maalai : கருங்காலி மாலையை அணிவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 02, 2024 07:00 AM IST

Benefits of Karungali maalai : கருங்காலி மாலையை அணிவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Karungali maalai : கருங்காலி மாலையை அணிவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்!
Benefits of Karungali maalai : கருங்காலி மாலையை அணிவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

கருங்காலி மாலையின் நன்மைகள்

மக்கள் கருங்காலி மரப்பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குளிக்கிறார்கள். இது சரும நோய்களை குணப்படுத்துகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது

கருங்காலி மாலையை நாம் உடலில் அணியும்போது அது எலும்புகளின் பலத்தை அதிகரிக்கிறது மேலும் ஆர்த்ரிட்டிஸ் வலியையும் போக்குகிறது. வலிக்கு நிவாரணத்தைக் கொடுக்கிறது. கருங்காலி மாலையுடன் தினமும் 4 முறை நடப்பது, இடுப்பு மற்றும் கால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதை அணிந்துகொண்டு குதிப்பது உங்கள் உடலுக்கு கூடுதல் நன்மைகளைக் கொடுக்கிறது.

நரம்புகளை அமைதிப்படுத்துகிறது

கருங்காலி மாலை உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. அது புண்கள், ரேஷ்கள், முகப்பருக்கள், சொரியாசிஸ் மற்றும் மற்ற சருமப் பிரச்னைகளை குணப்படுத்துகிறது. உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது. 

சோம்பலை போக்கி, மனதில் உள்ள பயத்தை நீக்கி, துர் சக்திகளிடம் இருந்து உங்களைக் காக்கிறது. உடலுக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுத்து, உங்களை வெற்றியாளராக்கி, பணத்தட்டுபாடு மற்றும் நிதி நெருக்கடிகளைப் போக்குகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது

உங்கள் மறதியைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது. உங்கள் விரக்தியைக் குறைத்து உங்கள் செயல்திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றல் இழப்பை தடுக்கிறது. நினைவாற்றலை அதிகரிக்கும் மற்ற வழிகளாக, மந்திரங்களை ஓதுவது உள்ளது. அதையும் செய்வது உங்கள் நினைவாற்றலைப் பெருக்கும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கருங்காலி மாலை ப்ரேஸ்லெட்கள் தென்னிந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை அணிவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் பயம், பதற்றத்தை குறைக்கிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

கருங்காலி பாத்திரத்தில் வைத்த தண்ணீர் காயங்கள், தழும்புகள் மற்றும் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்னைகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. இது உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் சமமாக்கும். இது மனத்தெளிவை வலுப்படுத்தும். மனஅழுத்தத்தை குறைக்கும். நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். இது கடவுள் சிலைகளுக்கும் மாலையாக அணிவிக்கப்படுகிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

கருங்காலி மாலை ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது. இது தியானம் மற்றும் பிரார்த்தனை நேரங்களில் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. ஜோதிட ரீதியாக மக்கள் தங்களின் தேவையின் அடிப்படையில் இந்த மாலையை அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது

கருங்காலி மாலை அணிவது நாள்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. இதை அணியும்போது அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வருகிறது. மனஅழுத்தம், பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது. 108 மணிகள் கொண்ட இந்த மாலை ஆன்மீக பயணத்தின் முடிவைக் குறிக்கிறது. 

வாழ்வில் செல்வமும், வளமும் பெருக உதவுகிறது. உங்கள் எதிர்மறை எண்ணங்களில் இருந்து காக்கிறது. கண்திருஷ்டி, பொய்கள், பொறாமை மற்றும் மனநல பாதிப்பில் இருந்து உங்களைக் காக்கிறது.

இதயத்தை வலுப்படுத்துகிறது

கருங்காலி மாலை இதயம் மற்றும் ஆன்மாலை வலுப்படுத்துகிறது. வாழ்வில் சவால்களை சந்தித்து வெற்றியடையச் செய்கிறது. இது மத நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள பிரச்னைகளை போக்குகிறது. ஆனால் இதை வாங்கும்போது அது உண்மையான ஒன்றுதானா என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

கருங்காலி மாலை எலக்ட்ரிக் ரேடியேசனை உள்வாங்கி, நேர்மறை எண்ணத்தைக் கொடுக்கிறது. உங்களின் மண்ணீரலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. கருங்காலி மாலையை இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். கருங்காலி மாலையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை பருகுவது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. கருங்காலி மாலை அணிவது பணப்பாதுகாப்பை வழங்கும்.

மண்ணீரலை வலுப்படுத்துகிறது

கருங்காலி மாலை அணிவது மண்ணீரலை வலுப்படுத்தி, ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகளை குணப்படுத்துகிறது. வீக்கத்தை குறைத்து உடலை வலுப்படுத்துகிறது.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

கருங்காலி மாலையை அணிவது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. வாழ்வில் உயர உதவுகிறது. வீட்டிற்கு செல்வத்தை அளிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்