தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  27 ஆண்டுகளுக்கு பின் சாதனை..இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டிய நியூசிலாந்து ஸ்பின்னர் - படுமோசமான பேட்டிங்

27 ஆண்டுகளுக்கு பின் சாதனை..இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டிய நியூசிலாந்து ஸ்பின்னர் - படுமோசமான பேட்டிங்

Oct 25, 2024, 01:55 PM IST

google News
நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், தனது அற்புதமான சுழலில் சிக்க வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டியுள்ளார் நியூசிலாந்து ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர். இந்தியாவன் படுமோசமான பேட்டிங் காரணமாக நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. (PTI)
நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், தனது அற்புதமான சுழலில் சிக்க வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டியுள்ளார் நியூசிலாந்து ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர். இந்தியாவன் படுமோசமான பேட்டிங் காரணமாக நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், தனது அற்புதமான சுழலில் சிக்க வைத்து இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலம் கட்டியுள்ளார் நியூசிலாந்து ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர். இந்தியாவன் படுமோசமான பேட்டிங் காரணமாக நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து, முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஆகியோரின் சுழலில் சிக்கி 259 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.

வாரி சுருட்டிய சாண்டனர்

இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் நியூசிலாந்து இடது கை ஸ்பின்னரான சாண்ட்னர். அவரது சுழலில் சிக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று பேட் செய்யாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா 45.3 ஓவரில் 156 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது. அத்துடன் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மிகவும் துல்லியமாக பவுலிங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்த சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிலிப்ஸ் 2, செளத்தி ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்திய பேட்டிங்கில் ஜடேஜா 38, கில் 30, ஜெயஸ்வால் 30 ரன்கள் எடுத்தனர். முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோஹித் ஷர்மா டக் அவுட்டாகி ஏமாற்றினார். அதேபோல் விராட் கோலியும் 1 ரன்னில் நடையை கட்டினார்.

ஜடேஜா ஆறுதல்

ஒரு புறம் முன்னணி பேட்ஸ்மேன் பெரிதாக ரன்களை குவிக்காமல் அவுட்டாகி வெளியேற, ஜடேஜா ஆறுதல் அளிக்கும் விதமாக பேட் செய்தார். பேட் செய்வதற்கு கடினமாக இருந்த பிட்சில், நியூசிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். கொஞ்சம் அதிரடி மோடில் விளையாடி வந்த அவரையும் சாண்ட்னர் தனது அற்புத பந்து வீச்சு மூலம் தூக்கினார். 46 பந்துகளில் 38 ரன்கள் அடித்த ஜடேஜா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

27 ஆண்டுகளுக்கு பின் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளை சேர்ந்த பவுலர்களும் 7 விக்கெட் வீழ்த்தியிருக்கும் நிகழ்வு 27 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றுள்ளது. கடந்த 1997இல் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஓவலில் நடைபெற்ற போட்டியில் இதற்கு முன் இரு அணிகளை சேர்ந்த பவுலர்களும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

நியூசிலாந்து நல்ல முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இன்றுடன் சேர்த்து மேலும் 3 நாள்கள் போட்டி எஞ்சியிருக்கிறது. எனவே இந்த போட்டியும் நியூசிலாந்துக்கு சாதகமாகவே தற்போதைய நிலையில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா மிகப் பெரிய பவுன்ஸ்பேக் கொடுக்க வேண்டும்.

பவுலிங்கில் கலக்கிய தமிழர்கள்

இந்தியா முதல் இன்னிங்ஸ் பவுலிங்கில் தமிழர்களான வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 என மொத்த 10 வக்கெட்டுகளையும் கைப்பற்றி கலக்கியுள்ளனர். இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் புதியதொரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை