World Cup 2023: அதிரடி காட்டிய சாண்ட்னர் - நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்! நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு
World Cup 2023 NZ vs NED Innings Break: நெதர்லாந்து அணி பவுலிங்கை அசாலடாக டீல் செய்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் இருந்தே ரன்குவிப்பில் ஈடுபட்ட நிலையில் 322 ரன்கள் குவித்துள்ளனர்.

கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய நியூசிலாந்து பேட்ஸ்மேன் மிட்செல் சாண்ட்னர் (AP)
உலகக் கோப்பை தொடரின் 6வது போட்டி நெதர்லாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் வைத்து இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியிலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கவில்லை. அதேபோல் ஜேமி நிஷம்க்கு பதிலாக லாக்கி பெர்குசன் அணியில் சேர்க்கப்பட்டார். நெதர்லாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த போட்டியில் முதல் பந்தில் டக்அவுட்டான வில் யங் இன்றைய போட்டியில் அணியின் அதிகபட்ச ஸ்காராக 70 ரன்கள் எடுத்துள்ளார்.
