தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  India 2nd Innings: மீண்டும் சொதப்பிய ரோகித்.. 2வது நாளில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை

India 2nd Innings: மீண்டும் சொதப்பிய ரோகித்.. 2வது நாளில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை

Manigandan K T HT Tamil

Sep 20, 2024, 05:09 PM IST

google News
Ind vs Ban 1st Test: முதல் இன்னிங்ஸிலும் பெரிய ஸ்கோர் பதிவு செய்யாமல் ஆட்டமிழந்தார் ரோகித். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 5 ரன்களில் நடையைக் கட்டினார். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. (AFP)
Ind vs Ban 1st Test: முதல் இன்னிங்ஸிலும் பெரிய ஸ்கோர் பதிவு செய்யாமல் ஆட்டமிழந்தார் ரோகித். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 5 ரன்களில் நடையைக் கட்டினார். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Ind vs Ban 1st Test: முதல் இன்னிங்ஸிலும் பெரிய ஸ்கோர் பதிவு செய்யாமல் ஆட்டமிழந்தார் ரோகித். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 5 ரன்களில் நடையைக் கட்டினார். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் 2வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 5 விக்கெட்டுகளிலும், கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 149 ரன்களை மட்டுமே எடுத்தது. தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடிய வங்கதேச அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஷான்டோ மட்டுமே 20 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழந்தார்.மோமினுல் ஹேக், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பவுலிங்கில் அவுட்டானார்.130 ரன்கள் எடுத்திருந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டும் சரிய, 149 ரன்களில் சுருண்டது வங்கதேசம். அந்த அணி 227 ரன்கள் பின்னிலையில் உள்ளது. இந்திய அணி 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறது.

பும்ராவுக்கு 4 விக்கெட்

பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ், ஜடேஜா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா-வங்கதேச அணிகள் இடையேயான ஆட்டத்தின் 2வது நாளில் குறைவான ரன்களையே இந்தியா எடுத்தது. அஸ்வினும் ஆட்டமிழக்க, 91.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸை தொடங்குகிறது. அஸ்வின் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ஆட்டமிழக்க ஆகாஷ் தீப் களம் புகுந்தார். வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார்.

4 பவுண்டரிகளை விளாசிய அவர் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு பந்தை சிக்ஸருக்கு தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். பின்னர், அஸ்வினும் அதே பாணியில் ஆட்டமிழக்க, பும்ராவும் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

முதல் டெஸ்ட்

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது பங்களாதேஷ். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி அசத்தினார். ஆனால், கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில் ரன் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கொடூரமான கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி அரை சதம்

கே.எல்.ராகுல், 16 ரன்களில் எடுத்தார். பின்னர் வந்த அஸ்வின் அதிரடி காட்டி சதம் விளாசினார். மறுமுனையில் ஜடேஜாவும் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். மொத்தம் 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு மிகவும் உற்சாகமான இடது கை வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் தாக்குதலை எதிரணிக்கு எடுத்துச் செல்ல விரும்பினர். இருவரும் அரை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் அவுட்டானார். ஆனால், யஷஸ்வி நிதானமாக விளையாடி 95 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 5வது அரை சதம் ஆகும். டெஸ்டில் 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து முதல் நாளில் 195 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை