IND vs BAN Day 1: மட்டையை சுழற்றிய மண்ணின் மைந்தன்.. நங்கூர பார்ட்னர்ஷிப்பில் அஸ்வின்-ஜடேஜா!
Ind vs Ban 1st Test: இந்தியா-வங்கதேச அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் 80 ஓவருடன் முடிவுக்கு வந்தது. இந்த மேட்ச்சில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களைக் குவித்தது இந்தியா.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது பங்களாதேஷ். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதம் விளாசி அசத்தினார். ஆனால், கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில் ரன் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கொடூரமான கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல், 16 ரன்களில் எடுத்தார். பின்னர் வந்த அஸ்வின் அதிரடி காட்டி சதம் விளாசினார். மறுமுனையில் ஜடேஜாவும் நிதானமாக விளையாடி அரை சதம் விளாசினார். மொத்தம் 86 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அஸ்வின் 112 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இரண்டு மிகவும் உற்சாகமான இடது கை வீரர்கள் மட்டுமல்ல, அவர்கள் தாக்குதலை எதிரணிக்கு எடுத்துச் செல்ல விரும்பினர். இருவரும் அரை சதம் விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் அவுட்டானார். ஆனால், யஷஸ்வி நிதானமாக விளையாடி 95 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 5வது அரை சதம் ஆகும். டெஸ்டில் 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.