தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  அணி வீரர் மீது தாக்குதல்..வங்கதேச பயிற்சியாளரை தூக்கி கிரிக்கெட் வாரியம் - என்ன நடந்தது?

அணி வீரர் மீது தாக்குதல்..வங்கதேச பயிற்சியாளரை தூக்கி கிரிக்கெட் வாரியம் - என்ன நடந்தது?

Oct 16, 2024, 08:00 AM IST

google News
அணி வீரர் மீது தாக்குதல் நடத்தியதாக வங்கதேசம் பயிற்சியாளராக தூக்கி எறிந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். புதிய தற்காலிக பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார். (PTI)
அணி வீரர் மீது தாக்குதல் நடத்தியதாக வங்கதேசம் பயிற்சியாளராக தூக்கி எறிந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். புதிய தற்காலிக பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி வீரர் மீது தாக்குதல் நடத்தியதாக வங்கதேசம் பயிற்சியாளராக தூக்கி எறிந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். புதிய தற்காலிக பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணம் வந்த வங்கதேசம் அணி டெஸ்ட், டி20 தொடரில் விளையாடியது. இதில் இரண்டிலும் முழுமையாக தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து வங்கதேசம் அணி அடுத்ததாக தென் ஆப்பரிக்கா அணியான எதிரான தொடரில் வெளியாகவுள்ளது.

வங்கதேசம் சுற்றுப்பயணம் வரும் தென் ஆப்பரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையே அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.

வீரரை உடல்ரீதியாக தாக்க முடியாது

தலைமை பயிற்சியாளர் இடைநீக்கம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஃபரூக் அஹ்மத், "உங்களால் ஒரு தேசிய வீரரை உடல்ரீதியாக தாக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் எந்த வீரர் மீது தாக்குதல் நடைபெற்றது என்பது குறித்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை. அத்துடன், வங்கதேசம் அணியின் தற்போது தற்காலிக பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் பேட்ஸ்மேன் பில் சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தனது இடைநீக்கம் குறித்து ஹத்துருசிங்க எவ்வித ரியாக்சனும் வெளிப்படுத்தவில்லை.

யார் இந்த ஹத்துருசிங்க?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹத்துருசிங்க. 56 வயதாகும் இவர் 1991 முதல் 1999 வரை இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

இவர் கடந்த 2014 முதல் 2017 வரை வங்கதேசம் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் வங்கதேசம் அணி பல்வேறு வெற்றிகளை குவித்தது.

இதன் பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையிலான வங்கதேச கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரு முக்கிய தொடர்களிலும் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.

இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்த போதிலும், தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக இழந்துள்ளது.

இந்த நேரத்தில் வீரரை தாக்கிய விவகாரத்தில் பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் நீக்கம் செய்துள்ளது.

உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்

2023 முதல் 2025 வரையிலான சுழற்சிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அனைத்து டெஸ்ட் விளையாடும் அணிகளும் விளையாடி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ள்ளிப்பட்டியலில் இந்தியா 11 போட்டிகள் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வி, ஒரு ட்ரா என 98 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

வங்கதேசம் அணி இதுவரை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 8 போட்டிகள் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் அணி 7வது இடத்தில் இருக்கிறது. இந்த புள்ளிபட்டியலில் 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை