Martin Crowe: நியூசிலாந்து அணியின் முதல் ரன் மெஷின்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கான்செப்டை உருவாக்கியவர்
நியூசிலாந்து அணியின் ஆரம்பகால்தில் ரன்மெஷினாக ஜொலித்து அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தவர் மார்டின் குரோவ்.
நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1982 முதல் 1995 வரை விளையாடிய மார்டின் குரோவ் சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்துள்ளனர். அந்த அணியின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் முக்கியமானவராக மார்டின் குரோவ் இருந்து வருகிறார்.
19 வயதிலேயே டெஸ்ட் அணியில் அறிமுகமான குரோவ், 1985இல் விஸ்டன் ஆண்டின் சிறந்த கிர்ககெட் வீரர் பட்டியலில் உலகின் சிறந்த இள வயது பேட்ஸ்மேன் என்ற பெயருடன் இடம்பிடித்தார்.
1990 முதல் 1993 வரை நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். 1992 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். 1980-90 காலகட்டத்திலேயே நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை சேர்த்து 10 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.
பேட்டிங்கை போல் சிறந்த பீல்டராகவும் ஜொலித்த மார்டின் குரோவ், அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்புமுனையாக அமையும் விதமாக பல்வேறு கேட்ச்களையும் படித்துள்ளார். அதேபோல் மித வேக பந்துவீச்சாளராக சில போட்டிகளில் விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராகவும், கிரிக்கெட் தொடர்பான எழுத்தாளராகவும் செயல்பட்டார். 2009ஆம் ஆண்டிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற கான்செப்டை அறிமுகப்படுத்தியதில் முக்கிய நபராக இருந்தார் என கூறப்படுகிறது. இதையடுத்து 2019இல் தான் அது நடைமுறைக்கு வந்ததது.
லிம்போமா என்ற நிணநீர் சுரப்பி தொடர்பான நோய் பாதிப்பில் பாதிக்கப்பட்ட குரோவ், 2016இல் உயிரிழந்தார்.நியூசிலாந்து அணியின் ரன்மெஷினாகவும், அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வந்த மார்டின் குரோவ் நினைவு நாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்