மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டி..வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேசம் முனைப்பு! புதிய காம்பினேஷனில் களமிறங்கும் இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டி..வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேசம் முனைப்பு! புதிய காம்பினேஷனில் களமிறங்கும் இந்தியா

மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டி..வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேசம் முனைப்பு! புதிய காம்பினேஷனில் களமிறங்கும் இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 12, 2024 11:36 AM IST

வங்கதேச ஸ்டார் ஆல்ரவுண்ட் மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டியாக இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டி அமைகிறது. தொடரை இழந்துவிட்டாலும் மஹ்மதுல்லாவை வெற்றியுடன் வழியனுப்பு வங்கதேசம் அணி முனைப்பு காட்டும். இந்திய அணியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் 4 வீரர்களில் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கலாம்.

மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டி..வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேசம் முனைப்பு
மஹ்மதுல்லாவுக்கு கடைசி டி20 போட்டி..வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேசம் முனைப்பு

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு வெற்றியை கூட ருசிக்காத நிலையில், ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.

இந்தியாவை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை கோப்பை வென்ற பின் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரையும் வென்ற ஹாட்ரிக் டி20 தொடர்களின் கோப்பையை வென்றிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது வரை விளையாடியிருக்கும் 10 டி20 போட்டிகளில் 9இல் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டும் தோல்வியை தழுவியுள்ளது.

மஹ்முதுல்லாஹ்வுக்கு கடைசி போட்டி

வங்கதேச அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மஹ்முதுல்லாஹ்வுக்கு, இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டி கடைசி டி20 போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே தொடர் இழந்துவிட்ட நிலையில், அணியின் முக்கிய வீரராக பல்வேறு வெற்றிகளுக்கு பங்களிப்பு அளித்த மஹ்முதுல்லாவை வெற்றியுடன் வழியனுப்ப வங்கதேச அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம்

140 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மஹ்முதுல்லாஹ், தற்போது நடைபெற்று வரும் தொடரில் நல்ல பார்மில் இருந்து வந்துள்ளார்.

நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய அணியின் டாப் ஆர்டர் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சொதப்பியுள்ளது. சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பெரிதாக சோபிக்கவில்லை. தற்போது தொடரை வென்றிருக்கும் சூழலில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கும் திலக் வர்மா, ஜித்தேஷ், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் ஆகிய நான்கு வீரர்களில் யாருக்கேனும் இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

பிட்ச் நிலவரம்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர்களில் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் செயல்பட்டது. இருப்பினும் தற்போதைய சூழலில் வேகப்பந்து வீச்சாளர்கள், ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடைசியாக இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டி தடைபட வாய்ப்பும் உள்ளது.

இன்று நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க இருக்கும் சாத்தியமான அணிகளின் விவரம்

இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி/ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்/ஹர்ஷித் ராணா

வங்கதேச அணியில், ஜேக்கர் அலிக்கு பதிலாக மஹேதி ஹசன் சேர்க்கப்படலாம்.

வங்கதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா,மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தாஸ்கின், தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.