ஆத்மநாதர் மேல் கொண்ட காதல்.. மாணிக்கவாசகர் எழுதிய கோயில்.. மூலவராக அமர்ந்த ஆத்மநாத சுவாமி!
Dec 18, 2024, 06:00 AM IST
Athmanathaswamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் ஆத்மநாத சுவாமி எனவும் தாயார் யோகாம்பாள் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Athmanathaswamy: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்ட மன்னர்கள் அனைவரும் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை கண்டனர். அந்த மன்னர்கள் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர்களாக திகழ்ந்துள்ளனர். சென்ற இடமெல்லாம் மற்றும் வெற்றி பெற்ற இடமெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி தங்களது வெற்றியையும் பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய புகைப்படம்
பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சிவபெருமானின் தீவிர சிவ பக்தர்களாக திகழ்ந்து வந்துள்ளனர். கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமான் உலகம் முழுவதும் லிங்கத் திருமனையாக காட்சி கொடுத்து வருகின்றார்.
மன்னர்கள் கட்டி வைத்து சென்ற கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சோழர்களின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை கட்டிடக்கலையில் ஆச்சரிய குறியீடாக திகழ்ந்து வருகிறது. இப்படி சிவபெருமானின் புகழாரத்தில் சொல்லிக்கொண்டே செல்லலாம்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் ஆத்மநாத சுவாமி எனவும் தாயார் யோகாம்பாள் என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் இந்த கோயிலை எழுப்பியதாக கூறப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார். இந்த ஆத்மநாத சுவாமி திருக்கோயிலில் குரு அம்சமாக காட்சியளித்து வருகிறார்.
மாணிக்கவாசகர் இந்த பகுதியில் தங்கியிருந்த பொழுது சிவனடியார் போல சிவபெருமான் வேடமடைந்து கொண்டு அவரது பாடல்களை கேட்டார். மாணிக்கவாசகம் சிவனடியாரிடம் பாடல்களை பாடினார். அந்த பாடல்களை அப்படியே சிவபெருமான் எழுதிய இப்பாடல்கள் அனைத்தும் மாணிக்கவாசகர் எழுதியது என எழுதி திருச்சிற்றம்பலம் உடையார் என கையெழுத்திட்டார். மறுநாள் சிவபெருமான் அதனை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.
இது குறித்து வேகம் பாடும் பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் விளக்கம் கேட்டனர். இதற்கு இவரே பொருள் எனக் கூறி சிவபெருமானை காண்பித்து விட்டு அப்படியே மாணிக்கவாசகர் சிவபெருமானோடு கலந்துவிட்டார். இதனை உணர்த்தும் வகையில் ஆத்ம நாதர் சன்னதியில் முகப்பில் சிவபெருமான் அடியார் வடிவில் காட்சி கொடுத்து வருகிறார். அருகில் மாணிக்கவாசகர் கைகாட்டியபடி இருக்கின்றார்.
தல வரலாறு
அரிமர்த்தன பாண்டியனின் சபையில் அமைச்சராக மாணிக்கவாசகர் பணியாற்று வந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றார் மாணிக்கவாசர். மாணிக்கவாசகர்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை குதிரைகளாகவும், வைகையில் வெள்ளத்தை ஏற்படுத்தியும் திருவிளையாடல் நடத்திக் காட்டினார்.
மாணிக்கவாசகர் ஒருமுறை சிதம்பரத்திற்கு வந்திருந்தார். வேத முனிவர்கள் தங்கி இருந்த பரண சாலையில் மாணிக்கவாசகர் தங்கியிருந்தார். இருப்பினும் திருப்பெருந்துறையில் இருக்கக்கூடிய ஆத்மநாதரை தரிசிக்க முடியவில்லை என வருத்தத்தில் இருந்தார். பின்னர் அவர் இருக்கும் இடத்திலேயே ஆத்மநாதருக்கு சிறிய அளவில் கோயில் ஒன்றை எழுப்பினார். அதில் இருக்கும் மூலவருக்கு ஆத்மநாதர் என்ற திருநாமத்தை சூட்டினார். அதுதான் தற்போது இருக்கக்கூடிய ஆத்மநாதர் திருக்கோயில்.