HT Yatra: சாபமிட்ட துர்வாச முனிவர்.. காட்டில் வாழ்ந்த ஐராவதம்.. மோட்சம் கொடுத்த முக்தீஸ்வரர்-you can know about the history of arulmigu sri muktheeswarar temple in teppakulam madurai district here - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: சாபமிட்ட துர்வாச முனிவர்.. காட்டில் வாழ்ந்த ஐராவதம்.. மோட்சம் கொடுத்த முக்தீஸ்வரர்

HT Yatra: சாபமிட்ட துர்வாச முனிவர்.. காட்டில் வாழ்ந்த ஐராவதம்.. மோட்சம் கொடுத்த முக்தீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 13, 2024 06:40 AM IST

HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் முக்தீஸ்வரர் எனவும் தாயார் மரகதவல்லி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர் தீர்த்தம் தெப்பக்குளம், தலவிருட்சம் வில்வமரம்.

சாபமிட்ட துர்வாச முனிவர்.. காட்டில் வாழ்ந்த ஐராவதம்.. மோட்சம் கொடுத்த முக்தீஸ்வரர்
சாபமிட்ட துர்வாச முனிவர்.. காட்டில் வாழ்ந்த ஐராவதம்.. மோட்சம் கொடுத்த முக்தீஸ்வரர்

தனக்கென்று ஒரு உருவம் இல்லாமல் லிங்க ரூபத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை மாமன்னர்கள் தட்டிச் சென்றுள்ளனர்.

சில கோயில்கள் யாரால் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை தெரியவில்லை. அந்த அளவிற்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக பல கோயில்கள் நின்று வருகின்றன. கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

கலை நுட்பத்தோடு கம்பீரமாக பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சில கோயில்கள் வரலாற்றுச் சித்திரமாக நம் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. எத்தனையோ வரலாறுகளை சுமந்து கொண்டு இந்த கோயில்கள் இன்று வரை புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் முக்தீஸ்வரர் எனவும் தாயார் மரகதவல்லி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர் தீர்த்தம் தெப்பக்குளம், தலவிருட்சம் வில்வமரம்.

தல பெருமை

பல சிவபெருமான் கோயில்களில் ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது சில நொடிகள் சூரிய பகவான் தனது ஒளிக்கரங்களால் சுவாமியை நேரடியாக தரிசனம் செய்வார். ஆனால் இந்த கோயிலில் மட்டும்தான் மார்ச் 10 முதல் 21ஆம் தேதி வரையும் செப்டம்பர் 19 30 ஆம் தேதி வரையும் 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரிய பகவான் நேரடியாக தனது ஒளிக்கதிர்களை லிங்கத்தின் மீது செலுத்தி பூஜை செய்கின்றார். அதன் காரணமாகவே இந்த திருக்கோயிலில் நவகிரக சன்னதிகள் கிடையாது.

இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார் இந்த விநாயகரை வழிபட்டால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வில்வ மரத்தடியில் இருக்கக்கூடிய விநாயக பெருமானை வழிபட்டால் நாம் கண்ட கனவு நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

முனிவர்களில் பிரசித்தி பெற்றவர் துர்வாச முனிவர். இவர் மிகப்பெரிய சிவ பூஜை செய்து மலர் மாலையை. அந்த மாலையை இந்திரனிடம் அவர் ஒப்படைத்தார். அந்த மலர் மாலையை இந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தார். ஐராவதம் அந்த மாலையை தூக்கி கீழே வீசியது.

புனிதம் நிறைந்த தனது மலர் மாலையை இந்திரனும் அவரது வாகனமான ஐராவதமும் அலட்சியப்படுத்திய காரணத்தினால் முனிவருக்கு கோபம் ஏற்பட்டது. முனிவர் உடனே சாபமிட்டார். இதனால் தேவர்களின் தலைவனாக விளங்கிய இந்திரன் தனது பதவியை இழந்தார். ஐராவதம் காட்டு யானையாக சாபத்தால் காட்டில் வாழ்ந்து வந்தது.

இதன் காரணமாக வில்வ வனத்தில் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்த சிவபெருமானை ஐராவதம் வழிபட்டது. இதனால் மனமிரங்கிய சிவபெருமான் ஐராவதம் யானைக்கு காட்சி கொடுத்து அதன் சாபத்தை நீக்கினார். அதன்பின்னர் இந்த பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கரின் சகோதரர் முத்துவீரப்ப நாயக்கர் இந்த லிங்கத்திற்கு கோயில் எழுப்பி வழிபட்டார். அதுவே தற்போது அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலாக திகழ்ந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9