தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. மீனாட்சி சொக்கநாதர் கல்யாணம்

மாங்கல்யம் செய்த தேவர்கள்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. மீனாட்சி சொக்கநாதர் கல்யாணம்

Oct 22, 2024, 06:00 AM IST

google News
Chokkanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Chokkanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Chokkanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Chokkanathar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர். சிவபெருமான் என்று திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன் வசம் வைத்துள்ளார்.

சமீபத்திய புகைப்படம்

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சிரமங்களை அனுபவிக்க போகும் மூன்று ராசிகள்.. கேதுவின் விளைவு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த போகுகிறது!

Nov 15, 2024 06:58 AM

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ராசியினரே சனி பகவான் குறி வச்சுட்டார்.. யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்!

Nov 14, 2024 07:32 PM

சிவபெருமானுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் நமது இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்கள் அந்த காலத்தில் பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

சிவபெருமானின் தீவிர பக்தனாக அனைத்து மன்னர்களும் திகழ்ந்து வந்துள்ளனர். சிவபெருமானை குல தெய்வமாகவே வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் தீவிர பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே வானுயர்ந்த கோயில்களை மன்னர்கள் கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரம் குறையாமல் வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது தான் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சொக்கநாதர் எனவும் தாயார் மீனாட்சி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தல விருச்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக ஆகாய கங்கையும் திகழ்ந்து வருகின்றன.

தல சிறப்பு

இந்த கோயிலில் கிழக்கு முகம் நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். அம்பாள் சன்னதி தெற்கு முகம் நோக்கி காணப்படுகிறது. இந்த கோயிலில் காட்சி கொடுக்கக் கூடிய விநாயகர் வில்வ விநாயகர் என அழைக்கப்படுகிறார். உஷா மற்றும் சாயாதேவியுடன் சூரியன் அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில் வழிபட்டால் திருமண தோஷம் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருமணத்திற்காக பக்தர்கள் தாலிக்கொடியை வைத்து பூஜை செய்த பிறகு தங்களது திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். இதனால் அவர்களுடைய இல்லற வாழ்வு சிறப்பும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சனீஸ்வரர் யோக சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கியபடி இந்த திருக்கோயிலில் யோக சனீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார். சனிபகவானால் தோஷம் ஏற்பட்டுள்ள பக்தர்கள் சனிக்கிழமைகளில் எள் விளக்கு போட்டு காகைக்கு அன்னதானம் செய்து முருக பெருமானை வழிபட்டு சனீஸ்வரனை வேண்டிக் கொண்டால் சுபிட்சம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

தல வரலாறு

மதுரையை ஆண்டு வந்த மீனாட்சியம்மனை திருமணம் செய்வதற்காக கயிலை மலையிலிருந்து சிவபெருமான் மதுரை நோக்கி வந்தார். சிவபெருமான், மீனாட்சி அம்மன் இருவருக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. மதுரைக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் திருமணத்திற்காக தேவர்கள் வந்திருந்தனர்.

அந்த இடத்தில் தங்கத்தை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு சிவபெருமானை தேவர்கள் வழிபட விரும்பினார்கள். அவர்களின் விருப்பத்தை சிவபெருமான் உணர்ந்தார். மாங்கல்யம் செய்த இடத்தில் திருமணத்திற்கு முன்பாகவே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் சமேதராக காட்சி கொடுத்தனர். அவர்கள் காட்சி கொடுத்த இடத்திலேயே சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் மீனாட்சி எனவும் அழைக்கப்பட வேண்டும்.

நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர். சொக்கநாதர் மற்றும் மீனாட்சி இருவருக்கும் மாங்கல்யம் செய்த இடம் என்கின்ற காரணத்தினால் இந்த இடம் திருமாங்கல்ய புரம் என அழைக்கப்பட்டது காலப்போக்கில் இந்த இடம் திருமங்கலம் என மறவியது. அதன் பின்னர் இந்த இடத்தில் மன்னர்கள் கோயில் கட்டி உள்ளனர்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை