அடிக்கடி தடுக்கி விழுந்த இடையன்.. இரத்தத்தால் தன்னை காட்டிய சிவபெருமான்.. கோயில் கொண்ட சுந்தரேஸ்வரர்
Sundareswarar: அப்போது கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வரலாற்று கலை பொக்கிஷமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
Sundareswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் வாழக்கூடிய இந்தியர்கள் சிவபெருமானுக்கு கோயில் அமைத்து வழிபாடுகளை தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர். கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உலகத்தில் மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
அப்படிப்பட்ட சிவபெருமான் இந்தியாவில் போற்றுதலுக்குரிய கடவுளாக திகழ்ந்து வருகின்றார். திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து வாழக்கூடிய எத்தனையோ மகன்கள் இருந்து வருகின்றனர்.
தற்போது மட்டுமல்லாமல் மன்னர்கள் காலத்திலிருந்து சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்துள்ளது. எதிரி மன்னர்களாக இருந்து மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் ஒரு புறம் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டு மன்னர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஒருவருக்கொருவர் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய கலை நயமிக்க பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
அப்போது கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை வரலாற்று கலை பொக்கிஷமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் பாகம் பிரியாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் விளங்கி வருகிறது. தீர்த்தமாக பைரவர் திருத்தம் உள்ளது
குறிப்பாக இந்த கோயிலில் இருக்கக்கூடிய காலபைரவருக்கு காட்டப்படும் கற்பூர ஆரத்தியானது பக்தர்களுக்கு காட்டப்பட மாட்டாது. அதேபோல காலபைரவருக்கு வழிபாட்டிற்காக வைக்கப்படும் சந்தனம், குங்குமம், விபூதி, பூ உள்ளிட்ட அனைத்தும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுவது கிடையாது. அதேபோல சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியார் இருக்கும் சந்ததிகளிலும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படுவது கிடையாது.
ஒருமுறை இந்த பகுதியை ஆண்ட மன்னர் இந்த கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அமைச்சர் ஒருவர் கோயில் மரபை மீறி மன்னருக்கு முதல் தீபாராதனை காட்டியுள்ளார். அதற்கு பிறகு பிரசாதத்தை அவர் மூலம் தரச் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கொடுக்கப்பட்ட பிரசாதத்தில் சந்தனத்தை மன்னர் நெற்றிலும், தீபாரதனையில் தொட்டும் கண்ணிலும் வைத்துள்ளார்.
அதன் பின்னர் கோயிலை விட்டு மன்னர் வெளியேறிய பொழுது சந்தனம் வைத்த நெற்றியிலும், தீபாராதனையில் தொட்டு வைத்த கண்ணிலும் வெண்புள்ளிகள் வந்து குஷ்ட நோய் ஏற்பட்டுள்ளது. இதில் கலங்கிப்போன மன்னர் தனது தவறை உணர்ந்து இங்கு வீற்றிருக்கக் கூடிய பைரவர் சன்னதிக்கு வந்து அழுது வழிபட்டுள்ளார் அதன் பின்னர் அவருக்கு அவருடைய நோய் தீர்த்துள்ளது. அதன் காரணமாகவே இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாருக்கும் பிரசாதம் கொடுக்கப்படுவது கிடையாது.
தல வரலாறு
இலங்கையில் யுத்தம் செய்துவிட்டு ராமபிரான் அயோத்தி நோக்கி திரும்பி உள்ளார். அவரோடு பல முனிவர்களும் தங்கள் இருப்பிடம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது இந்த வழியாக துர்வாச மகரிஷும் சென்றுள்ளார். அங்கு காணப்பட்ட ஒரு சிவலிங்கத்தை பூஜை செய்துள்ளார்.
அதற்குப் பிறகு பிற்காலத்தில் அங்கு இருந்த சிவலிங்கம் புதைந்து விட்டது. இடையன் ஒருவர் இந்த வழியாக பால் கொண்டு சென்றுள்ளார். தொடர்ச்சியாக செல்லும் பொழுது இந்த இடத்தில் இருந்த மரத்தின் வேறு ஒன்று தட்டி அடிக்கடி தடுக்கி விழுந்துள்ளார். அவர் வைத்திருந்த பால் அந்த இடத்தில் விழுந்துள்ளது.
உடனே ஒரு நாள் அந்த வேரை வெட்ட முயற்சி செய்த பொழுது அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. பயந்து போன இடையன் அந்த இடத்தை தோண்டி பார்த்தபொழுது அங்கு லிங்கம் இருப்பதை கண்டு கொண்டார். அதன் பின்னர் பிற்காலத்தில் அங்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. துர்வாச முனிவர் வழிபட்ட காரணத்தினால் அந்த ஊர் துர்வாசபுரம் என அழைக்கப்பட்டது.