HT Temple SPL: பித்ரு தோஷம், தீரா பிரச்னைகளையும் தீர்க்கும் மங்கள சனீஸ்வரர்..எங்கு தெரியுமா?
Mangala Saneeswarar Temple: பித்ரு தோஷம், கிரக தோஷங்களை நீக்கி சகல பலன்களை தரும் மங்கள சனீஸ்வரர் பகவானின் சிறப்புக்கள் பற்றி இங்கு காண்போம்.

சனி தோஷம் தீர்த்து, பித்ரு தோஷம், கிரக தோஷங்கள், சங்கடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி அருள்புரிபவராக விளங்குகிறாா் சனி பகவான். அட்சயப் பாத்திரம் போல் அள்ள அள்ளக் குறையாமல் பொருளை தந்தருளும் சனிபகவான் எங்கு வீற்றிருக்கிறாா் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் சனிபகவான் தனி சந்நிதியில் தம் தேவியரோடு ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்கள சனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த பூமியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபிரளயம் உண்டாகும். பூமியில் வாழக்கூடிய உயிரினங்கள் அழிந்து மீண்டும் தோன்றும். அப்படியொரு பிரளய காலத்தின் முடிவில் பூமியில், மீண்டும் புதிய உயிரினங்கள் தோன்றவும். மனிதகுலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்குளம் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வராக தோன்றினார் என்கிறது ஸ்தல புராணம்.