ஹன்சிகா மதுரை விசிட்! மும்பையில பிறந்தாலும் நான் தமிழ் பொண்ணு தான்! இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்!
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி, இவர் தமிழில் முதன் முதலாக தனுஷ் உடன் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஹன்ஸிகா மோத்வானி, இவர் தமிழில் முதன் முதலாக தனுஷ் உடன் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா உள்பட பலருடன் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று (அக்- 6 ) மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று உள்ளார். அங்கு உள்ள ஹோட்டலிலும் சாப்பிட்டு உள்ளார்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு
நடிகை ஹன்ஸிகாவிற்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருந்து வருகிறது. பல புனித கோவில்களுக்கு செல்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ஒரு படம் ஆரம்பிக்கும் முன்னும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவார். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனது அம்மாவுடன் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் ஹன்ஸிகா வந்ததை அடுத்து கோயிலுக்கு அவரை ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டு வரவேற்றனர் இவர்கள் வழிபடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் பொண்ணுங்க நான்
தனது மதுரை விசிட் குறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் “மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு” எனத் தமிழில் பதிவு செய்துள்ளார். ஹன்சிகா மற்ற மொழி படங்களைக் காட்டிலும் தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமான காலத்திற்கும், தற்போதும் அவரது தமிழும் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக தற்போது வரும் பல பேட்டிகளில் ஹன்சிகா சரளமாக தமிழ் பேசி வருகிறார். மேலும் இவரது அரண்மனை திரைப்படம் பல குட்டீஸ் குழந்தைகளும் இவரை விரும்ப வழி வகுத்தது. இதன் வாயிலாக மும்பையில் பிறந்தாலும் தமிழ் எனும் உணர்வால் தான் தமிழ் பெண்ணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஹன்சிகா வெளியிட்ட வீடியோவில் மதுரையில் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் படியாக உள்ளது. தமிழ் நாட்டு உணவுகளில் இட்லி தனக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு பிரபல ஃபுட் ரிவ்யுவருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் இவர் நடித்த my 3 என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. மேலும் தற்போது காந்தாரி என்ற பாடலின் சூட்டிங் வீடியோவும் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஹன்சிகாவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் ஹன்சிகாவின் நண்பர் ஆவார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதன் தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களும் ஹன்சிகாவின் இந்த கோயில் விசிட்டை பாராட்டி வருகின்றனர். மேலும் தமிழில் புது படம் ஏதும் ஹன்சிகா கமிட் ஆகி உள்ளாரா எனவும் பேசப்பட்டு வருகிறது. இவரது இன்ஸ்டா பக்கத்திலும் ரசிகர்கள் இவரது வீடியோவிற்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

டாபிக்ஸ்