தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Full Moon Day Worship : பௌர்ணமி வரும் கிழமைகளும், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளும்!

Full Moon Day Worship : பௌர்ணமி வரும் கிழமைகளும், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளும்!

Priyadarshini R HT Tamil

Jun 03, 2023, 03:30 PM IST

Full Moon Day Worship : வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு நாளில் பவுர்ணமி வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும்.
Full Moon Day Worship : வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு நாளில் பவுர்ணமி வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும்.

Full Moon Day Worship : வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு நாளில் பவுர்ணமி வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும்.

பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை வந்தால், அது சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய தோஷம் உள்ளவர்களுக்கு, சூரியனால் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் உத்திரம், உத்திராடம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் தீராத நோய்கள் தீர துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வாழ்வில் யோகம் உண்டாகும். சகல பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். உங்கள் ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மேற்கூறிய இந்த பரிகாரம் செய்யலாம்.

சமீபத்திய புகைப்படம்

குரு கிருத்திகையில் புரட்டி எடுப்பார்.. அதிர்ஷ்டத்தை 3 ராசிகளுக்கு பிரித்துக் கொடுக்க போகிறார்.. 10 ஆண்டு பலன்கள்

May 05, 2024 09:33 AM

Bad Luck Rasi : இந்த ராசிக்காரர்களுக்கு இது கடினமான நேரம்.. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு.. நிதானம் தேவை!

May 05, 2024 06:30 AM

Pradhosa Fasting : பிரச்னைகளை தீர்க்கும் பிரதோஷ விரதம்! கணவன் - மனைவி இடையே இணக்கத்தை உருவாக்கும்! எப்படி இருப்பது?

May 04, 2024 05:42 PM

Hastham Nakshatram: ’அமைதியாக இருந்து அதிரடி காட்டுவார்கள்!’ அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 04, 2024 05:12 PM

மீனத்தில் சித்து வேலை செய்யும் செவ்வாய்.. தலைகீழாக புரட்டி அடிப்பது உறுதி.. இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்

May 04, 2024 05:08 PM

சொகுசை தரப்போகும் சுக்கிரன்.. ஆடம்பரமாக வாழப்போகின்ற ராசிகள்.. அதிர்ஷ்ட பணமழை இவர்களுக்குத்தான்

May 04, 2024 03:36 PM

திங்கள் கிழமை வந்தால், சந்திர தசை உள்ளவர்கள், கடக ராசிக்காரர்கள், திருவோணம், அஸ்தம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற அல்லது ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து வந்தால் சங்கடங்கள் தீர்ந்து சுபகாரியங்கள் கைகூடும். வெளிநாடு செல்வதில் தடை இருந்தால் தீரும். வாழ்வில் சகல செல்வ வளங்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம். ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி முருகன் மற்றும் அங்காரகனுக்கு உகந்த தினம். எனவே இந்த நாளில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், செவ்வாய் தோஷம், செவ்வாய் திசை நடப்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு வர்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய அத்தனை எதிர்ப்புகளும் நீங்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும் என்பது ஐதிகம். நட்சத்திரம் மற்றும் ராசி தெரியாதவர்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

புதன் கிழமை பௌர்ணமி வந்தால், புதன் திசை நடப்பவர்கள், புதன் பகவான் வழிபாடு செய்ய நன்மைகள் நடக்கும். மேலும் மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் சிறந்த அறிவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படவும் துர்க்கை அம்மனுக்கு இந்த தினத்தில் பச்சை நிற வஸ்திரம் சாற்றி முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய சகல யோகங்களும் வாழ்வில் பெறுவார்கள். ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வியாழக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வணங்க தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும். குருவை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாளாக இந்நாள் இருக்கும். இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள், துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்து, தயிர் சாதம் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் நிவேதனம் வைத்து வழிபட சகல வளங்களும் பெறுவார்கள். பொன் பொருள் சேரும். மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயரும் என்பது ஐதீகம். ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வெள்ளிக்கிழமை பௌர்ணமி சுக்ரனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுகிறது. களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சுக்கிர திசை நடப்பவர்கள், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைபட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை என்றாலே சனீஸ்வரரை வணங்குவதற்கு ஏற்ற தினமாக உள்ளது. சனியும், பவுர்ணமியும் இணைந்தால் சனியால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் நீங்கும். சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் துர்க்கை அம்மனுக்கு நீல நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் தீராத ஆரோக்கிய பிரச்சனைகள் விரைவாக தீர்ந்துவிடும். மனதில் உற்சாகம் பிறக்கும். நவக்ரஹ தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இன்னல்களிலிருந்து விடுபட 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

டாபிக்ஸ்