தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi : 2025ல் சனிபகவான் ஆட்டத்தை காட்டும் ராசியா நீங்கள் .. எந்த ராசிக்கு ஏழரை சனி தொடங்கும் பாருங்க!

Sani Peyarchi : 2025ல் சனிபகவான் ஆட்டத்தை காட்டும் ராசியா நீங்கள் .. எந்த ராசிக்கு ஏழரை சனி தொடங்கும் பாருங்க!

Sep 21, 2024, 01:09 PM IST

google News
Sani Peyarchi : வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.
Sani Peyarchi : வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.

Sani Peyarchi : வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.

Sani Peyarchi : 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க உள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடக்கப்போகிறது. இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12  ராசிகளுக்கு 25ல் எப்ப இருக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். முதலாவதாக ஏழரை சனி ஏழரை சனியை மூன்று இரண்டரை ஆண்டு காலமாக பிரித்துச் சொல்லலாம் முதலாவது இரண்டரை வருடத்தை விரைய சனி என்றும் அடுத்ததாக வரும் இரண்டரை வருடத்தை ஜென்ம சனி என்றும் இறுதியாக வரக்கூடிய இரண்டரை வருடத்தை பாதசனி என்றும் அழைக்கிறோம். 2023 லிருந்து மகரத்திற்கு பாத சனியும், கும்ப ராசிக்கு ஜென்ம சனியும், மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியும் நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய 2025 சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்து அடுத்த இரண்டரை வருடம் விரையசனி நடைபெறப்போகிறது. மீன ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய விரைய சனி முடிந்து அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி நடைபெறப்போகிறது.

சமீபத்திய புகைப்படம்

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

கும்ப ராசிக்கு இப்பொழுது நடக்கக்கூடிய ஜென்ம சனி முடிந்து இறுதி இரண்டரை வருடமான பாதசனி நடைபெறப்போகிறது. இதில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து முழுமையாக விடுதலை அடையப் போகிறீர்கள். மேஷ ராசிக்கு ஏழரை சனி 2025 இல் தொடங்கி அடுத்த ஏழரை வருடம் நடைபெறப்போகிறது.

அர்த்தாஷ்டம சனி

ராசிக்கு நான்கில் சனி வரும்பொழுது நடக்கக்கூடியது அர்த்தாஷ்டம சனியாகும். இப்பொழுது 2023 லிருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து வருகிறது. 2025 இல் சனி பெயர்ச்சியிலிருந்து சனி தனுசு ராசிக்கு மாறி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தம சனி முடியப்போகிறது.

கண்டக சனி

ராசிக்கு 7ல் சனி வரும்பொழுது நடக்கக்கூடிய பெயர்ச்சி கண்டக சனியாகும். 2023 லிருந்து சிம்ம ராசிக்கு நடைபெற்று வரும் கண்டக சனியானது 2025 சனி பெயர்ச்சியிலிருந்து சனி கன்னி ராசிக்கு ஏழாம் இடத்திற்கு செல்கிறார். எனவே சிம்ம ராசிக்கு கண்டக சனி விலகி கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டக சனி தொடங்கப்போகிறது.

அஷ்டம சனி

ராசிக்கு 8ல் சனி வரும்பொழுது நடக்கக்கூடிய சனி அஷ்டம சனியாகும். 2023 லிருந்து கடக ராசிக்கு அஷ்டம சனி நடந்து வருகிறது 2025ல் நடைபெறப்போகிற சனி பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி விலகி சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கப்போகிறது.

இந்த 2025 சனி பெயர்ச்சியில் சனி பாதிப்பிலிருந்து முழுமையாக விலகப் போகிற ராசிக்காரர்கள்

மகர ராசி, கடக ராசி , விருச்சிக ராசி.

2025 மார்ச் 29 இல் நடக்கக்கூடிய சனி பெயற்சியால் அடுத்த இரண்டரை வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி என்பதனை சுருக்கம் மாக காண்போம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்கு விரைய சனி நடைபெறப்போகிறது 70% நல்ல பலன்கள் கிடைக்கும்

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு லாப சனி 95% நல்ல பலன்கள் கிடைக்கும்

மிதுன ராசி

மிதுன ராசிக்கு கர்ம சனி நடைபெறப்போகிறது 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசிக்கு பாக்கிய சனி 90% நல்ல பலன்கள் கிடைக்கும்

சிம்ம ராசி 

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி 76% நல்ல பலன்கள் கிடைக்கும்

கன்னி ராசி

கண்டக சனி 70% நல்ல பலன்கள் கிடைக்கும்

துலாம் ராசி

ரோக சனி 95% நல்ல பலன் பலன்கள் கிடைக்கும் 

விருச்சிக ராசி

பஞ்சம சனி 91% நல்ல பலன்கள் கிடைக்கும்

தனுசு ராசி

அஷ்டம சனி 80% நல்ல பலன்கள் கிடைக்கும்

மகர ராசி 

சகாய சனி ஏழரை சனியிலிருந்து விடுபட போகிறீர்கள் 92% நல்ல பலன்கள் கிடைக்கும்

கும்ப ராசி 

பாத சனி 65% நல்ல பலன்கள் கிடைக்கும் 

மீன ராசி

ஜென்ம சனி 50% நல்ல பலன்கள் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி