Purattasi Thaligai : நாளை புரட்டாசி சனி.. தளிகை போடும் முறை.. தளிகைக்கு பயன்படுத்தப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் இதோ!-purattasi thaligai tomorrow how to make thaligai here are the details about the foods used for thaligai - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Purattasi Thaligai : நாளை புரட்டாசி சனி.. தளிகை போடும் முறை.. தளிகைக்கு பயன்படுத்தப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் இதோ!

Purattasi Thaligai : நாளை புரட்டாசி சனி.. தளிகை போடும் முறை.. தளிகைக்கு பயன்படுத்தப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2024 10:51 AM IST

Purattasi Thaligai : புரட்டாசி மாதம் சனிக்கிழைமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை. இந்த காலத்தில் விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்தது. விஷ்ணு வழிபாட்டால் நம் வேண்டுதல் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Purattasi Thaligai : நாளை புரட்டாசி சனி.. தளிகை போடும் முறை.. தளிகைக்கு பயன்படுத்தப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் இதோ!
Purattasi Thaligai : நாளை புரட்டாசி சனி.. தளிகை போடும் முறை.. தளிகைக்கு பயன்படுத்தப்படும் உணவுகள் குறித்த விபரங்கள் இதோ!

கன்னி ராசியில் எழுந்தருளும் சூரியன்

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் எழுந்தருள்வார். அதனால் இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் கிடைக்கும். அதுதான் இந்த புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம். புரட்டாசி மாதம் சத்திய நாராயணர் பூஜையும் செய்வதற்கு உகந்தது.

தேதி நேரம்

இந்த ஆண்டு புரட்டாசியில் 21.9.2024, 28.9.2024, 5.10.2024, 12.10.2024 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி தளிகை இட்டு வழிபாடு செய்யலாம். அல்லது அக்டோபர் 12ம் தேதி தளிகை போட சிறந்த நாள். இந்த நாளில் மாவிளக்கும் போட்டு வழிபாடு செய்யலாம்.

இந்த ஆண்டு எந்தெந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை இடலாம் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டு புரட்டாசியில் 4 சனிக்கிழமைதான். பொதுவாக முதல் சனி, 3 ஆவது சனி, 5 ஆவது சனிக்கிழமை வந்தால் அன்றும் தளிகை இட்டு வழி படலாம். இடையில் வரும் சனிக்கிழமை கூட வாய்ப்புள்ளவர்கள் தளிகை போட்டு வழிபாடு செய்யலாம். ஆனால் இந்த ஆண்டு இரண்டாவது சனிக்கிழமை ஏகாதசி வருகிறது. இதனால் அந்த நாளில் தளிகை இட்டால் அதை சாப்பிடுவது கஷ்டம். பலர் அந்த நாளில் ஏகாதசி விரத்தில் இருப்பார்கள். அதிலும் புரட்டாசி ஏகாதசி மிகவும் விஷேசம். அதனால் அந்த நாளில் பெருமாளுக்கு துளசி மாலையிட்டு துளசி தீர்த்தம் வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம். அடுத்தது 3 ஆவது சனிக்கிழமை நவராத்திரி தொடங்குகிறது. கிருத்திகை திதியும் அமைந்துள்ளது. இந்த நாளில் மகாலட்சுமியை வணங்குவது விஷேசம். கடைசி சனிக்கிழமை தளிகை இட்டு அல்லது மாவிளக்கு போட்டு வழிபாடு செய்து கொள்ளலாம்.

தளிகையில் பயன்படுத்தப்படும் உணவுகள்

சர்க்கரை பொங்கல், தேங்காய் சாதம், புளிசாதம், லெமன் சாதம், நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், கருப்பு சுண்டல், வெங்காயம் சேர்க்காத வெறும் மிளகு மற்றும் சீரகம் மட்டும் சேர்த்து செய்யும் உளுந்து வடை, பானகம், மாவிளக்கு போன்ற உணவுகளை வைத்து தளிகை இடலாம். மாவிளக்கு, சாம்பார் சாதம், பழங்கள் மாதுளை முத்துக்கள் திராட்சை போன்றவை வைத்து வழிபட விரும்புபவர்கள் செய்யலாம்.

வழிபாட்டு முறை

நாராயணர் படத்தை நன்றாக சுத்தம் செய்து துளசி, சம்மங்கி, சாமந்தி, தாமரை உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் 3 இலை போட்டு தளிகையில் சாதத்தை வைத்து வழிபடலாம். வாய்ப்பு உள்ளவர்கள் செய்த சாதங்களை பெருமாளின் முகம் போல் அலங்கரித்து கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை சொல்லி மனதார வழிபாடு செய்யலாம். அந்த சாமி வைத்த மனையில் சிறிய விநாயகர் அல்லது மஞ்சள் விநாயகர் பிடித்து வைக்கலாம். குல தெய்வத்தை மனதில் நினைத்து இந்த வழிபாடு செய்வது வாழ்வில் தடங்கல்கள் நீங்கி பல்வேறு நன்மைகள் கிட்ட வழிவகை செய்யும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்