தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Head Rajju: தலை ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?.. அதிர்ச்சியூட்டும் ஜோதிட தகவல்கள்!

Head Rajju: தலை ரஜ்ஜு நட்சத்திரங்களை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?.. அதிர்ச்சியூட்டும் ஜோதிட தகவல்கள்!

Karthikeyan S HT Tamil

Mar 16, 2024, 07:08 PM IST

google News
Marriage Matching: திருமணப் பொருத்தங்களில் தலை ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அதற்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Marriage Matching: திருமணப் பொருத்தங்களில் தலை ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அதற்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Marriage Matching: திருமணப் பொருத்தங்களில் தலை ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அதற்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் செய்வதற்கு முன்பு பத்து பொருத்தங்களில் முக்கியமானதாக கருதப்படுவது ரஜ்ஜு பொருத்தமாகும். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த மண மக்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். குறிப்பாக பொருத்தங்களில் தலை ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அதற்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.25 யாருக்கு பிஸியான நாளாக இருக்கும் பாருங்க..!

Dec 24, 2024 03:38 PM

இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் உறுதி! டிசம்பரில் பூர்வாஷாத நட்சத்திரத்தில் நுழையும் சூரியன்!

Dec 24, 2024 02:31 PM

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வதுண்டு. 'இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தான் தேவன் என்று பாடுகிறோம்.. ஆனால், பல வகையான நடைமுறைகளை பின்பற்றி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

திருமணம் செய்வதற்கு முன்பாக மணமக்களின் ஜாதகத்தில் பொருத்தங்கள் இருக்கிறதா? என்னென்ன பொருத்தங்கள் இருக்கிறது. அதாவது 10 பொருத்தங்களில் 9 பொருத்தங்கள் இருந்தாலும், குறிப்பாக ரஜ்ஜு பொருத்தம் இருக்கிறதா என்பதை ஆராய்வது தற்காலம் வரை கடைபிடிக்கப்படுகிறது.

ரஜ்ஜு பொருத்தம் என்பது பத்து திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. அந்த அளவு இந்த ரஜ்ஜு பொருத்தத்திற்கு முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. ரஜ்ஜு பொருத்தம் சிரசு ரஜ்ஜு (தலை), கண்ட ரஜ்ஜு (கழுத்து), உதர ரஜ்ஜு (வயிறு), ஊரு ரஜ்ஜு (தொடை), பாத ரஜ்ஜு (கால்) என ஐந்து வகைகள் உள்ளன.

27 நட்சத்திரங்களில் தலை ரஜ்ஜு என்பதற்கு சிரசு ரஜ்ஜு என்று பொருள்படும். இந்த சிரசு ரஜ்ஜு (தலை) மூன்று நட்சத்திரத்திற்கு மட்டுமே பொருந்தும். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்றும் தலை ரஜ்ஜு கொண்டவை. தலை சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்தால் ஒத்துபோகாது என்பது ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது.

தம்பதியர்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாற்பது வயதாகும் போது சனி திசை ஆரம்பித்துவிடும். சனி திசையில் ஒரே நட்சத்திரக்காரர்கள் சந்திக்கும் போது அதாவது தலை ரஜ்ஜு பொருத்தத்தில் திருமணம் செய்யும் போது தலை கணவன், மனைவிக்கு இடையே பிரிவு, நோய்கள், நிரந்தர பிரிவு, ஆயுள் கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மூன்று நட்சத்திரங்களும் சனி திசையும் சனி திசையில் சந்திக்கும் போது இந்த பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஒருவேளை சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டியது அவசியம். அதேநேரம் சனி பலமாக இருந்தால் ஆயுளை கெடுக்கமாட்டார். பிரச்னைகள் வராது. திருமணம் செய்யவிருக்கின்ற ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் திருமணம் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி