புதன்கிழமை இந்த பொருட்களை வாங்காதீர்கள்.. எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்.. இதோ பாருங்க!
Mar 27, 2024, 06:45 AM IST
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய தினம். சனிக்கிழமை கடுமையான பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதிக எடையுள்ள பொருட்கள் வீடு மனை வாங்கும் எண்ணத்தை இன்றைய தினம் கைவிட வேண்டும்.
ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை இருக்கும் அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருள் வாங்கினால் அந்த பொருளின் ஆயுள் நீடிக்கும்.நீண்டு உழைக்கும். நமக்கும் செல்வம் சேரும் என்று முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். அப்படி எந்த நாட்களில் எந்த பொருள் வாங்கினால் நமக்கு அதிர்ஷ்டம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை எப்படி கல் உப்பு வாங்கினால் செல்வத்தை அதிகரிக்க செய்யுமோ அதேபோலத்தான் ஒவ்வொரு கிழமைகளிலும் சில பொருள் வாங்கினால் நமக்கு நன்மை அளிக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள்.
திங்கட்கிழமை
திங்கள் கிழமை சந்திர பகவானுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த நாள் என்று சொல்லலாம். இந்த நாளில் சூரிய பகவானை வழிபடுவதும் சிவபெருமானை வழிபடுவதும் நமக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும். இந்த நாளில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை வாங்கினால் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டமும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். அந்த வகையில் திங்கட்கிழமை அரிசி வாங்குவது இனிப்பு பொருட்களை வாங்குவது, தானியங்கள், மின்சாதன பொருட்கள் வாங்கும் போது நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் ஆஞ்சநேயருக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நிலம் வாங்கவோ விற்கவோ செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல சொத்து சம்பந்தமான விஷயங்களை இந்த நாளில் செய்வதால் நன்மை பயக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய தினத்தில் பால் மரம் தோல் சம்பந்தமான பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்.
புதன்கிழமை
புதன்கிழமை புதன் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் என்றே சொல்லலாம். இன்றைய தினத்தில் பச்சை காய்கறிகள், வீட்டு அலங்கார பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கல்வி சம்பந்தமான பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டில் நிறைய பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய தினத்தில் அரிசி வாங்குவது வீட்டுமனைகள் வாங்குவது பாத்திரம் வாங்குவது மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவது கூடாது.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை குரு பகவானை தரிசிப்பது நல்லது. மின்னணு சாதனங்கள் நவீன உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு இந்த வியாழக்கிழமை சிறந்த நாளாக உள்ளது. அசையும் சொத்துக்களை வாங்குவோம் இந்த நாள் சிறந்த நாளாக உள்ளது. இன்றைய நாளில் கண்ணாடி பொருட்கள் வாங்குவது மிகவும் கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை
இன்றைய தினம் அம்பாளுக்கு உரிய தினம் என்றே சொல்லலாம் இன்றைய தினத்தில் மங்களகரமான பொருட்கள் வாங்குவது வாசனை திரவியங்கள் அழகு சாதன பொருட்கள் வாங்குவதன் மூலம் வீட்டில் பொருளாதார நிலை மேம்படும். வெள்ளிக்கிழமையில் கருப்பு எள் சமையல் எண்ணெய் விளக்கேற்றும் எண்ணெய் உலோகங்கள் மரம் சார்ந்த பொருட்கள், கல் உப்பு, துடைப்பம் போன்ற பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
இன்றைய தினத்தில் கத்தி கத்திரிக்கோல் போன்ற கூர்மையான ஆயுதங்களை வாங்குவது கூடாது. வெள்ளிக்கிழமை மசாலா அரைக்க கூடாது இப்படி அழைப்பது நமக்கு தரித்திரத்தை தேடித் தரும்.
சனிக்கிழமை
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய தினம். சனிக்கிழமை கடுமையான பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதிக எடையுள்ள பொருட்கள் வீடு மனை வாங்கும் எண்ணத்தை இன்றைய தினம் கைவிட வேண்டும். சனிக்கிழமை இந்த பொருட்களை வாங்கும்போது கடனும் வறுமையும் உடல் நலக் கோளாறும் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாளில் தோட்டம் சார்ந்த பொருட்கள் செடிகள் வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வணங்குவது மூலம் கண் பார்வை குறைபாடு குறையும். கண்ணாடி சம்பந்தமான பொருட்களை வாங்குவது விசேஷமான பலன்களை கொடுக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் பொருட்கள், கோதுமை, தானியம் வண்டி வாங்க இந்த நாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
டாபிக்ஸ்