தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tomato Kuruma A Taste That Makes You Want To Taste It Again And Again Check Out The Website Of Tomato Guruma

Tomato Kuruma : மீண்டும், மீண்டும் ருசிக்க தூண்டும் சுவையில்; தளதளன்னு தக்காளி குருமா இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Mar 25, 2024 07:59 AM IST

Tomato Kuruma : வித்யாசமான சுவையில் இப்டி செஞ்சு பாருங்க தக்காளி குருமா.

Tomato Kuruma : மீண்டும், மீண்டும் ருசிக்க தூண்டும் சுவையில்; தளதளன்னு தக்காளி குருமா இப்டி செஞ்சு பாருங்க!
Tomato Kuruma : மீண்டும், மீண்டும் ருசிக்க தூண்டும் சுவையில்; தளதளன்னு தக்காளி குருமா இப்டி செஞ்சு பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சை மிளகாய் – 2

சோம்பு – ஒரு ஸ்பூன்

பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

தக்காளி குருமா செய்ய

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பட்டை – 1

கல்பாசி – கால் ஸ்பூன்

ஜாவித்ரி – கால்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு - இடித்தது

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தக்காளி - 6 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – இரண்டரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு

செய்முறை -

மசாலா விழுது அரைக்க

மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நல்ல விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.

தக்காளி குருமா செய்ய

ஒரு அகலமான கடாயில் எண்ணெய், சீரகம், பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்கவேண்டும்.

அடுத்து இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.

பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.

அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர், உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவேண்டும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

அட்டகாசமான தக்காளி குருமா தயார்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்