தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Puducherry Sri Angala Parameswari Temple

வியாபாரத் தடை நீக்கும் அங்காள பரமேஸ்வரி!

Aug 17, 2022, 02:04 PM IST

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது முத்தையால்பேட்டையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயில். இந்த கோயில் 400 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயிலாக உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

Today Horoscope: ‘மகிழ்ச்சியும் லாபமும் காத்திருக்கு.. உழைப்பு முக்கியம்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

May 03, 2024 06:26 AM

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM

சனி கஷ்டப்படுத்த போகிறார்.. வக்ரத்தில் சிக்கிய 3 ராசிகள்.. 5 மாதம் விடமாட்டார்.. கும்பத்தில் சம்பவம்

May 02, 2024 02:17 PM

Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

May 02, 2024 01:40 PM

Transit of Venus : சுக்கிரன் பெயர்ச்சி.. பலன்களை அள்ளப்போகும் மூன்று ராசிகள்.. பதவி உயர்வு.. சம்பள உயர்வு கிடைக்கும்!

May 02, 2024 12:19 PM

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM

இந்த கோயிலில் விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், பாவாடைராயன், அன்னபூரணி அம்மன், துர்க்கை அம்மன், ஐயப்பன், மாரியம்மன், சனீஸ்வரன் கொல்கத்தா காளி, ஈஸ்வரன் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அங்காளம்மன் சிம்மாசனத்தில் வீற்றிருக்க, பாவாடைராயன் தன் குடலையே பிடுங்கி எடுத்து வாழை இலையில் வைத்து அம்மனுக்குப் படையில் போடுவது போன்ற வகையில் காட்சி தருகின்றனர். மேல்மலையனூருக்கு அடுத்து இக்கோயில் வட திசை நோக்கிக் காணப்படுகிறது.

கொல்கத்தா காளியும் வேறு எந்த கோயிலிலும் கிடையாது. அங்காளம்மனை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம், தாலி பாக்கியம் கிடைக்கும் என்றும், பில்லி, சூனியம், வியாபார தடை, தீராத நோய்கள் போன்றவை வாழ்வில் நீங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா, தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு 1008 எலுமிச்சைப்பழம் அர்ச்சனை, ஆடி அமாவாசை அன்று கடல் தீர்த்தவாரி, மாசி மகம், சிவராத்திரி, மயானக் கொள்ளை, பிரம்ம உற்சவம் ஆகியவை முக்கிய விழாவாக நடைபெறுகிறது.